ஆந்திராவில் திங்கள்கிழமை (மே 13) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம் நந்தியாலாவில் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி எம்.எல்.ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்திற்கு முன் அனுமதியின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் விதிகளை மீறியதாக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, நந்தியாலா தொகுதியில் தேர்தலை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட, துணை தாசில்தார் ராமச்சந்திர ராவ் வழக்கு பதிவு செய்தார்.
இது குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,“நான் என் விருப்பதின அடிப்படைய்யல் இங்கு வந்தேன். எனது நண்பர்கள் மத்தியில், அவர்கள் எந்த துறையில் இருந்தாலும், அவர்களுக்கு எனது உதவி தேவைப்பட்டால், நான் அவர்களுக்கு உதவுவேன். அதற்கு நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.