CSK vs RR: வெற்றியால் தோனி மீண்டும் வரார்… பிரகாசமான சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு!

CSK vs RR : ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த சீசனின் 12ஆவது மேட்சில் விளையாடிய சி.எஸ்.கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, சஞ்சு சாம்சன் தலைமை தாங்க, சென்னை அணிக்கு ருதுராஜ் கைக்வாட், தலைமை தாங்கினார். இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

இந்த சீசனில் ஒரே ஒரு முறையை தவிர அனைத்து முறையும் டாஸ் தாேற்ற ருதுராஜ், இந்த முறையும் டாஸில் தோற்றுப்போனார். இதையடுத்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சென்னை அணியின் சுழல் ஜாலத்தில் சிக்கி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து, 20 ஓவர் முடிவில் 142 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள், விரைவில் போட்டியை முடிப்பார்கள் என்று பார்த்தால் எதிர்பாராத சமயங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

ரசிகர்களை டென்ஷன் செய்த சென்னை அணி: 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் மிகவும் குறைவாக இருந்ததால், சென்னை அணியின் வெற்றி என்பது நிச்சயமாக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிறங்கிய சென்னை அணி, தொடக்கத்தில் வேகமாக ஆடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. இதனால், இப்போட்டி 20 ஓவர் வரை செல்லுமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மனங்களில் எழுந்ததை பார்க்க முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் மற்றும் ரச்சன் ரவிசந்திரா ஆகியோர் முதல் சில ஓவர்களில் அடித்து ஆடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். ஆனால், ரச்சன் ரவிச்சந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல்லும் 13 பந்துகளில் 13 பந்துகளில் 22 ரன்களை குவித்தார். ஜடேஜா ரன் அவுட்டாக, ஆட்டம் சிறிது சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதனால், ரசிகர்கள் இன்றும் வழக்கம் போலதான் செல்லும் போல என எண்ணி டென்ஷனாக ஆரம்பித்தனர். 

பிரகாசமான ப்ளே ஆஃப் வாய்ப்பு:

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் வெற்றிகளை பெற்றாலும், அடுத்து மிகவும் மோசமான ஆடத்தையே வெளிப்படுத்தியது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் உடனான போட்டியிலும் தோற்றுப்போக, சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த போட்டியில் வெற்றி  பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி, 18.2 ஓவர்களுக்குளில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. தற்போது புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது சென்னை அணி. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.