இனி டாஸ் கிடையாது! கிரிக்கெட்டில் பிசிசிஐ கொண்டுவந்துள்ள புதிய மாற்றம்!

ஜெய் ஷாவின் பரிந்துரைகளின்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2024-25 சீசனுக்கான உள்நாட்டு கிரிக்கெட்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய உள்ளது. அடுத்த சீசன் சிவப்பு மற்றும் வெள்ளை பந்துப் போட்டிகளுடன் தொடங்கும் என்றும் சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே டிராபி ஆகிய இரண்டும் தொடர்களும் துலீப் டிராபி, இரானி கோப்பை மற்றும் ரஞ்சி கோப்பையின் முதல் ஐந்து போட்டிகளுக்குப் பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் பால் போட்டியுடன் உள்நாட்டு கிரிக்கெட்டை தொடங்குவதைத் தவிர, துலீப் கோப்பைக்கான அணிகளை தேசிய தேர்வாளர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் ஷா பரிந்துரைத்துள்ளார்.

NEW EXPERIMENT BY BCCI…!!!!

– In the the U-23 CK Nayudu Trophy, the visiting team will have the option to bat first or bowl first as they will eliminate the toss method. [Sahil Malhotra from News18] pic.twitter.com/GMY9dZEt3I

— Johns. (@CricCrazyJohns) May 11, 2024

ஒவ்வொரு மாநில சங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்த சோனல் தேர்தல் கமிட்டிகள் தான், அந்த மண்டலத்தைச் சேர்ந்த துலீப் கோப்பைக்கான அணிகளை இதுவரை அறிவித்து வந்தனர். இனி இந்தப் வேலை தேசிய தேர்வாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 போன்ற அனைத்து மகளிர் மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகள் தேசிய தேர்வாளர்களால் மட்டுமே அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு வீரர்களின் உடற்தகுதியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் போதிய இடைவெளிகள் இருக்கும். சமீபத்தில் இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஒவ்வொரு போட்டிகளுக்கு இடையில் இடைவெளி இல்லாதது பற்றி பேசி இருந்தார். 

டாஸ் நீக்கம்

U-23 CK நாயுடு டிராபியில் இருந்து டாஸை நீக்க ஒரு பரிந்துரையும் செய்யப்பட்டு உள்ளது. வெளியில் இருந்தும் அணிகள் இனி முதலில் பேட்டிங் செய்வதா அல்லது பந்துவீச்சை தேர்வு செய்வதா என்பதை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில், சமச்சீர் செயல்திறனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய புள்ளி முறையும் சேர்க்கப்பட உள்ளது. “முதல் இன்னிங்ஸ் முன்னிலை அல்லது வெற்றிக்கான புள்ளிகளுடன், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்திறனுக்கான புள்ளிள் ஆகியவை இதில் அடங்கும். இந்த புதிய புள்ளிகள் முறையின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஒவ்வொரு சீசனின் முடிவிலும் ஒரு மறுஆய்வு நடத்தப்படும்.

பனிமூட்டம் 

வட இந்தியாவில் 2023-24 சீசனில் பனிமூட்டம் காரணமாக நிறைய போட்டிகள் நடைபெற முடியாமல் போனது. இத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க, வானிலை நிலைமை மோசமாக உள்ள இடங்களில் அதிக போட்டிகளை நடத்த வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. எனவே, அந்த அந்த மாநிலங்களின் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப போட்டிகளின் அட்டவணைகள் தீர்மானிக்கப்படும். இதற்கிடையில், மற்றொரு முக்கியமான அறிவிப்பு என்ன வென்றால் ரஞ்சி டிராபியின் 2024-25 சீசன் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. துலீப் டிராபியில் மண்டல அமைப்பை ஓரிரு சீசன்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்திய பிறகு பிசிசிஐ அதை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.