புதிய 84kwh பேட்டரி பெறுகின்ற 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை வெளிப்புறத்தில் பெற்று இருப்பதுடன் இன்டிரியரிலும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. மேலும், EV6 GT பற்றி எந்த விபரங்களும் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.
முன்புறத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பம்பருடன் புதுப்பிக்கப்பட்ட புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பாக இடம் பெற்று இருந்த ஹெட்லைட் ஆனது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் மற்றும் ஏர் இன்டேக் போன்றவை எல்லாம் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் பக்கவாட்டு தோற்றம் அமைப்பில் எந்த ஒரு மாற்றங்களும் இல்லாமல் புதிய பிரிக்கப்பட்ட அளவில் மட்டும் பெற்றிருக்கின்றது மற்றபடி புதிய டெயில் லேம்ப் மற்றும் பம்பர் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் தற்பொழுது இடம் பெற்று இருப்பதை போன்று மிகவும் அகலமான பனேராமிக் ஸ்கிரீனுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் இன்போடையின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஸ்டீயரிங் வீலில் கூடுதலாக தற்பொழுது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆனது கொடுக்கப்பட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய கைரேகை வைத்தாலே போதுமானதாகும்.
ஒற்றை மோட்டார் பெற்ற RWD வேரியண்டில் 226 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் வெளிப்படுத்தும் மோட்டார் பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளது. டாப் AWD இரட்டை மோட்டார் கொண்ட வேரியண்ட் 321 bhp மற்றும் 605 Nm டார்க்கை வழங்குகின்றது.
முந்தைய 77.4 kWh பேட்டரி நீக்கப்பட்டு தற்பொழுது பெரிய 84 kWh பேட்டரி பேக் மூலம் கியா தென்கொரிய சந்தையில் 494 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என சோதனை மூலம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
350 kW DC சார்ஜரில் இணைக்கப்படும் போது EV6 ஃபேஸ்லிஃப்ட் வெறும் 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் EV6 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு வெளியாகலாம்.