“அவமானப்படுத்தப்படுவேன் எனப் பயந்தேன்..!" – பாஜக-வின் ராமர் கோயில் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல், `ராமர் கோயில் திறப்பு விழாவுக்குக் காங்கிரஸுக்கு அழைப்பு கொடுத்தும் அவர்கள் வரவில்லை’ எனப் பிரதமர் மோடி முதல் பா.ஜ.க பேச்சாளர்கள் வரை பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டில் சர்வாதிகார ஆட்சியைத் திணிக்கப் பிரதமர் மோடி முயற்சிக்கிறார். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நான் செல்லவில்லை. ஏன் தெரியுமா…

அயோத்தி ராமர் கோயில்

நான் தலித், நான் அந்த திறப்பு விழாவுக்குச் சென்றால் அவமானப்படுத்தப்படுவேன் எனப் பயந்தேன். நான் சென்று வந்ததற்குப் பிறகு, அந்த கோயிலை  தூய்மைப் படுத்துவார்கள். அது எனக்கான அவமானம். அதனால்தான் நான் செல்லவில்லை. பழங்குடியினரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை  நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவுக்கு ஏன் அழைக்கவில்லை. ‘பிரான்-பிரதிஷ்டா’ ராமர் கோயில் திறப்பதற்குக் கூட , முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏன் அழைக்கப்படவில்லை?

ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா, நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குக்கூட  அவர்கள் அழைக்கப்படவில்லையே ஏன்? எனவே, சாதி, மதம், சமூகத்தைத் தாண்டி மோடியைத் தோற்கடிக்க வேண்டும். பழங்குடியின முதல்வர் ஹேமந்த் சோரன் பா.ஜ.க-வுக்கு கட்டுப்படாததால், பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, சர்வாதிகார ஆட்சியை அனுமதிக்க வேண்டாம். பா.ஜ.க-வின் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தையும், ஒவ்வொரு கட்டமாக அவர்களின் மாறிவரும் மனநிலையும் நாட்டு மக்களால் கவனிக்கப்படுகிறது.

மல்லிகார்ஜுன கார்கே

ஆரம்பத்தில் ‘ஆப்கி பார், 400 பார்’ என்று தொடங்கி, தற்போது மாங்கல்யம், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என மாற்றி மாற்றிப் பேசினார். இது மோடியின் பதட்டத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே, நீங்கள் வேலை வாய்ப்புக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும், இந்த நாட்டின் குடிமகனாக உங்கள் அடிப்படை உரிமைகளை மீட்பதற்காகவும் வாக்களிக்க வேண்டிய நேரம் இது.

அதானிகளும் அம்பானிகளும் காங்கிரஸுக்குப் பணம் அனுப்புகிறார்கள் என்று மோடி கூறுகிறார். அப்படியானால்,, அதானிகள் மற்றும் அம்பானிகளுக்கு எதிராகச்  செயல்பட விடாமல் உங்களைத் தடுத்தது யார்? நீங்கள் அவர்களுக்குப் பயப்படுகிறீர்களா? பணமதிப்பிழப்பு, மோசடி போன்ற போலி குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்களை நீங்கள் சிறையில் அடைக்கும்போது அதானி, அம்பானி விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.