அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்தவர் சுப்ரியா பரத்வாஜ். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்தியா டுடே தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்ச்சி நடைபெற்ற போது, […]
