படைவீரர்களை வசிக்கச் செய்வதற்காக அரச காணிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேவையில் இருக்கும் போது காணாமல் போன மற்றும் அங்கவீனமுற்று மற்றும் தற்போதும் சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படை வீரர்கள் வசிப்பதற்காக அரச காணிகளை வழங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முறை தொடர்பாக ஆணையாளர் நாயகத்தினால் அமைச்சரவைத் தீர்மானங்களை அடிக்கடி சுற்று நிருபங்களை ஆலோசனைகளாக வெளியிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
தற்போது அங்கே அனுமதிக்கப்பட்டு காணப்படும் முறைகளில் படைவீரர்களுக்கான நிவாரணம் போதுமானதாக இல்லை என்றும் உரிமையை அனுபவிக்கும் காணிகளுக்காக உரித்தான நிபந்தனைகளுடன் சட்ட ரீதியான ஆவணங்களில் காணப்படும் வரையறைகளை சாத்தியமான காரணிகளாக அக்காணிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பொருளாதார பெறுமதியை உறுதிப்படுத்தவில்லை என்றும் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறே படை வீரர்களுக்கு காளி வழங்கும் போது தற்போது கருத்துக் கொள்ளப்படும் முறைகளினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்குத்தீர்வுகளில் உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்துவதற்கான முறையைத் திருத்துவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.