2025 ஆம் ஆண்டு வரவுள்ள கியா கேரன்ஸ் எம்பிவி ரக மாடல் தென்கொரியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன் முறையாக வெளியாகி உள்ளது. இந்த முறை கேரன்ஸ் ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் ஆப்ஷனிலும் வரவுள்ளது.
விற்பனையில் உள்ள மாடஇன்டீரியர் தொடர்பான எந்த ஒரு படங்களும் தற்போது கிடைக்கவில்லை இருந்தாலும் இன்டீரியலும் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்றிருக்க வாய்ப்புள்ளதுலை விட மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்றிருக்கலாம் இந்த மாடல் மற்றபடி என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் இருக்கப்போவதில்லை. சமீபத்தில் வந்த கியா கார்களில் பயன்படுத்தி வருகின்ற C வடிவ எல்இடி டெயில் லைட் ஆனது இந்த மாடலுக்கும் பெற உள்ளது.
இரு பக்கமும் புதுப்பிக்கப்பட்ட பம்பர், புதிய அலாய் வீல் டிசைன் பெற்று பல்வேறு மாற்றங்களில் சிறிய அளவிலான வளைவுகள் மற்றும் கோடுகளை பெற்றிருக்கும். இன்டிரியர் தொடர்பான எந்த ஒரு படங்களும் தற்போது கிடைக்கவில்லை இருந்தாலும் இன்டிரியலும் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
தற்பொழுது கேரன்ஸ் மாடலில் 115 எச்பி பவரை வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 160 எச்பி பவரை வழங்குகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 116 ஹெச்பி பவரை வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றது. மேனுவல், ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் ஆகியவற்றை பெறுகின்றது.
ICE என்ஜின் மட்டுமல்லாமல் கேரன்ஸ் எலக்ட்ரிக் மாடல் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் 400கிமீ-600கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பேட்டரி ஆப்ஷனை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.