புதுடெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்த டெல்லி அணியின் ஓப்பனராக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து கைகோத்த அபிஷேக் போரல் – ஷாய் ஹோப் அதிரடி காட்டினர். அபிஷேக் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 38 ரன்களில் அவுட்டானார்.
4 சிக்சர்களுடன் 53 ரன்களைச் சேர்த்த அபிஷேக்கை 12ஆவது ஓவரில் நவீன் உல் ஹக் அவுட்டாக்கினார். ரிஷப் பந்த் 33 ரன்கள், ட்ரிஸ்டன் 57 ரன்கள் அக்ஸர் படேல் 14 ரன்கள் என 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 208 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டன், அக்ஸர் இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இதனையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்குடன் லக்னோ அணியின் ஓப்பனர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் வெறும் ஐந்து ரன்களுடன் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார். குயின்டன் டி காக் 8 பந்துகளில் 12 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். தீபக் ஹூடா ஒரு ரன்கள் கூட எடுக்காமலும், ஆயுஷ் பதோனி ஆறு ரன்களுடனும் அவுட் ஆகினர்.
லக்னோ ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமான நிக்கோலஸ் பூரன் 27 ரன்களில் 67 ரன்களை குவித்து அசத்தினார். எனினும் 11வது ஓவரில் முகேஷ் குமார் வீசிய பந்தை தூக்கி அடித்து அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
குருனல் பாண்டியா 18 ரன்கள், அர்ஷத் கான் 58 ரன்கள், யுத்விர் கான் 14 ரன்கள், ரவி பிஸ்னோய் 2 ரன்கள், நவீன் உல் ஹக் 2 ரன்கள் என 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றியை பதிவு செய்தது.