EPFO: திருமணம், கல்விக்கு அட்வான்ஸ் பணம் பெறுவது ஈசி… புதிய விதிமுறைகள் வந்தாச்சு..!

இ.பி.எப் முன்பணம் எடுப்பதை எளிதாக்கியுள்ளது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO). இ.பி.எப் நிதியில் இருந்து முன்பணம் எடுப்பவர்களுக்காக ஆட்டோ க்ளெம் (Auto Claim) முறை 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அது கொரோனா காலகட்டம் என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக பணத்தை எடுப்பதற்காக இந்த ஆட்டோ க்ளெய்ம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும், மருத்துவக் காரணங்களுக்கு மட்டுமே இதுவரை ஆட்டோ க்ளெய்ம் முறை பயன்பாட்டில் இருந்து வந்தது. திருமணம், கல்வி போன்றவற்றுக்கு ஆட்டோ க்ளெய்ம் முறை இதற்கு முன்பு இல்லை.

இந்த நிலையில், ஆட்டோ க்ளெய்ம் முறையை திருமணம், கல்வி, வீடுக்கான அட்வான்ஸ் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்தியுள்ளது இ.பி.எஃப்.ஓ நிறுவனம்.

இது பல கோடிக்கணக்கான இ.பி.எப் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்த ஆண்டிலேயே ஆட்டோ க்ளெய்ம் முறையால் சுமார் 2.25 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPF

இது மட்டுமல்லாமல், ஆட்டோ க்ளெய்ம் முறையில் இதுவரை 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் பெறுவதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வரம்பை இ.பி.எஃப்.ஓ நிறுவனம் தற்போது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

2023-24 நிதியாண்டில் இ.பி.எஃப்.ஓ நிறுவனம் 4.45 கோடி க்ளெய்ம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கியுள்ளது. அதில் 60 சதவிகிதம் (2.84 கோடி க்ளெய்ம்கள்) மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்காக பெறப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.