Suryavamsam -2 : "150 வயசுல கூட சூர்யவம்சம் -2, 3, 4 பண்ணுவேன்!" – நடிகர் சரத்குமார்

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கிற திரைப்படம், ‘ஹிட் லிஸ்ட்’.

இத்திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. சமீபத்தில் நடிகர் சரத்குமார், ‘150 வருடங்களுக்கு நான் வாழ்வேன்’ எனப் பேசிய காணொளிகள் வைரலானது. தற்போது மீண்டும் அது தொடர்பாக இந்த விழாவில் பேசியிருக்கிறார்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சரத்குமார், ” இந்த நிகழ்வு நடக்குற கமலா திரையரங்கத்துல என் திரைப்படத்தோட 175வது நாள் விழாவைக் கொண்டாடியிருக்கோம். கமலா தியேட்டர் எப்போதும் சென்ட்டிமென்ட்டல்னு நான் சொல்வேன். கே. எஸ். ரவிக்குமார் சார் மேலேயும் விக்ரமன் சார் மேலேயும் எப்போதும் அன்பு வச்சிருக்கேன். 1990ல ரவிக்குமார் அவரோட முதல் திரைப்படமான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தை இயக்கினாரு. அந்த சமயத்துல நடிக்கிறத்துக்கு என்னைதான் முதல்ல கமிட் பண்ணியிருந்தார். அப்போ எதிர்பாராத விதமாக 60 அடியில இருந்து கீழ விழுந்து எனக்கு அடிப்பட்டுருச்சு. என்னுடைய கழுத்துல அப்போ சிகிச்சை நடந்தது. ரெண்டு ராடு, நாலு ஸ்குரு வச்சு என்னுடைய கழுத்தை நிக்க வச்சாங்க. அப்படி பார்த்தா நான்தான் அயர்ன் மேன் ( சிரிக்கிறார்). அப்போ ஆறு மாசம் நான் பெட் ரெஸ்ட்லேயேதான் இருந்தேன். வாழ்க்கைல எதுவும் நிரந்தரம் கிடையாது. அந்த சிகிச்சைக்கு அப்புறம் என்னால பேச முடியாம இருந்தது.

SarathKumar

அதுமட்டுமில்ல, நான் அந்த நேரத்துல ரொம்பவே பிஸியாக இருந்தேன். 11 படங்கள் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கி வச்சிருந்தேன். அப்போ ரவிக்குமார் வந்தாரு. என்னால அந்த சமயத்துல பேச முடியாததுனால அவர் வந்தப்போ அவர்கிட்ட ‘ அட்வான்ஸ் திரும்ப வாங்க வந்திருக்கீங்களா’னு ஒரு பேப்பர்ல எழுதி கேட்டேன். அவர் அதுக்கு ‘இல்ல, எத்தனை நாட்களானாலும் நீங்கதான் என் படத்துல நடிக்கிறீங்க’னு சொன்னார். ஆனா, அப்போ நான் 20 கிலோ எடைலாம் குறைஞ்சிருந்தேன். ரவிக்குமாருக்குமே அவர் எதிர்பார்த்த சரத்குமார் கிடைக்கமாட்டான்னு தெரியும். இருந்தாலும் அவர், ” ஆறு மாசமோ, ஒரு வருஷமோ நீங்கதான் என் படத்துல நடிக்கிறீங்க’னு உறுதியாக சொன்னாரு. அது எனக்கு ரொம்பவே எமோஷனலான தருணம். அப்படிதான் நான் புரியாத புதிர் படத்துக்குள்ள வந்தேன்.

அப்போ எனக்கு ஷூட்டிங்கிற்கு மாலை 6 மணில இருந்து அடுத்த நாள் காலை 2 மணி வரைக்கும் கால் ஷீட் சொல்லியிருந்தாரு. நான் காலைல 1 மணிக்குதான் ஸ்பாட்டுக்குப் போனேன். உடனே ரவிக்குமார் என்னைப் பார்த்து ‘அவன போகச் சொல்லுங்கயா…!’ னு கத்தினாரு.

உடனே நானும், ‘அவரைப் போகச் சொல்லுங்கயா’னு கத்துனேன். அப்போ கனல் கண்ணன் மாஸ்டர்தான் வாங்க படத்தை முடிப்போம்னு சமாதானம் பண்ணி வச்சாரு. உடனடியாக அன்னைக்கு இரவே ரவிக்குமார் என்கிட்ட ‘ வாங்க, கார்ல பேசிட்டே போவோம்’னு சொல்லி கூப்பிட்டாரு. அந்த அளவுக்கு அவருக்கு தங்கமான மனசு. விக்ரமன் சாரும் ரவிக்குமாரு சாரும் படம் பண்ணலாம்னு சொன்னா நான் கதையை பத்தி கவலையே படமாட்டேன். இந்த படம் நல்லா வரணும். இவங்களோட தொடர்ந்து பயணிக்கணும்னு விரும்புறவன் நான். ஆர். பி. செளத்ரி சாரோட தயாரிப்புல இதுவரைக்கும் 15 படங்கள் பண்ணியிருக்கேன். 100வது படமும் என்னை வச்சு பண்ணலாம்னு சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன். சூர்யவம்சம்-2 பண்ணலாம்னு பேசிட்டு இருந்தோம். அது சரியாக இன்னும் அமையல. சூர்யவம்சம் -2, 3, 4னு எனக்கு 150 வயசானாலும் நடிப்பேன். சரத்குமார் மெண்டாலாகிட்டார், 150 வருஷமானாலும் நடிப்பேன்னு சொல்றாருனு நாளைக்கு பத்திரிகைகள்ல எழுதுவாங்க.

SarathKumar

எனக்கு அது சந்தோஷம்தான். 150 வயசு வரைக்கும் வாழ்வேன்னு சொன்னா சந்தோஷப்படுறதைவிட கிண்டல் பண்றவங்கதான் அதிகமாக இருப்பாங்க. எப்படி 150 வயசு வரைக்கும் வாழ்வார்னு எழுதுவாங்க. ரஜினி சார் பார்க்கிற பாபாவே 4000 வருஷம் வாழ்ந்திருக்கார். புரட்சி தலைவரும், மக்கள் தலைவரும் இல்லைனாலும் இன்னைக்கும் வாழ்ந்துட்டு இருக்காங்க. அதுதான் வாழ்க்கை. ‘ I live forever’ என்பதை உருவாக்க வேண்டியதுதான் நம் கடமை. மது பழக்கத்தையும் போதை பழக்கத்தையும் தேவையில்லாதது என நினைப்பவன் நான். ” என முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.