பெங்களூர்: கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் யஷ் தற்போது நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் வலுவான அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்திருந்தார்.
