சென்னை டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில், ”அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்த விவரங்களை தினசரி பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சுகாதார மாவட்டம் வாரியாக […]