டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh பேட்டரி பேக் பெற்ற வேரியண்டின் விலை ரூ.1.08 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) கிடைக்கின்றது. இந்த மாடலை தவிர இந்நிறுவனம் 3.4kwh மற்றும் 5.1kwh என இரு வித பேட்டரி ஆப்ஷனை ஐக்யூபில் வழங்குகின்றது.
மிக நீண்ட மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மலிவு விலை ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள ஓலா S1X, ஏதெர் ரிஸ்டா உள்ளிட்ட மாடல்களுடன் வரவிருக்கும் சேட்டக் என பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
TVS iQube 2.2kwh Escooter
பொதுவாக அனைத்து வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியான வசதிகளை டிவிஎஸ் மோட்டார் வழங்குகின்றது. குறிப்பாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாகவும் விளங்குகின்றது.
ஆரம்ப நிலை டிவிஎஸ் ஐக்யூப் 2.2kwh லித்தியம் ஐயன் பேட்டரி பெற்று 950W சார்ஜரை கொண்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 0-80% பெற 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஈக்கோ மற்றும் பவர் என விதமான ரைடிங் மோடுகளை பெற்று கூடுதலாக பார்க்கிங் வசதிக்கான ரிவர்ஸ் மோடும் உள்ளது.
இந்த மாடலில் உள்ள BLDC மோட்டார் தொடர்ந்து 3.3kw பவர் (அதிகபட்சமாக 4.4kw) வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 33Nm (அதிகபட்சமாக 140Nm) வெளிப்படுத்துகின்றது. மேலும் 0-40kmph வேகத்தை எட்ட 4.2 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.
ஈக்கோ மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டும் நிலையில், முழுமையான சிங்கிள் சார்ஜில் 75 கிமீ வரை பயணிக்கும் ரேஞ்ச் கொண்டுள்ளது.
ஐக்யூபின் 2.2kwh பேட்டரியின் பவர் மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கிமீ வேகத்தை எட்டும் நிலையில், முழுமையான சிங்கிள் சார்ஜில் 60 கிமீ வரை பயணிக்கும் ரேஞ்ச் கொண்டுள்ளது.
வெள்ளை மற்றும் வால்நெட் பிரவுன் என இரு நிறங்களை பெற்று டியூப்லெர் ஃபிரேம் கொண்டுள்ள டிவிஎஸ் ஐக்யூப் மாடலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் பெற்று முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்குடன் இருபக்கத்திலும் 90/90-12 டியூப்லெஸ் டயரை பெற்றுள்ளது.
115 கிலோ எடை கொண்டுள்ள ஐக்யூப் 2.2kwh வேரியண்டின் 1805mm நீளம், 645mm நீளம் மற்றும் 1140mm அகலம் பெற்றுள்ள ஸ்கூட்டரின் வீல்பேஸ் 157 மிமீ, இருக்கை உயரம் 770 மிமீ மற்றும் வீல்பேஸ் 1301 மிமீ கொண்டுள்ள மாடலில் இருக்கை அடிப்பகுதியில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டு ஸ்டோரேஜ் இடவசதி கொண்டுள்ளது.
5 அங்குல TFT டிஸ்பிளே கிளஸ்ட்டரை பெறுகின்ற இந்த மாடலில் டிஜிட்டல் கனெக்ட்டிவிட்டி சார்ந்த டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஜியோஃபென்சிங், திருட்டை தடுக்கும் வசதி ஆகியவற்றுடற் டெலிமேட்டிக்ஸ், சார்ந்த சுமார் 118க்கு மேற்பட்ட வசதிகளை கொண்டிருக்கின்றது.
தமிழ்நாட்டில் 2024 டிவிஎஸ் ஐக்யூப் 2.2kwh ஆன்ரோடு விலை ரூ.1.19 லட்சத்தில் கிடைக்கின்றது. கூடுதலாக ஜூன் 30 ஆம் தேதி வரை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 12,300 வரை அறிமுக சலுகை கிடைக்கின்றது. மற்ற 3.4kwh பேட்டரி உள்ள மாடல் விலை ரூ.1.47 லட்சம் முதல் 5.1kwh மாடல் 1.97 லட்சம் வரை அமைந்துள்ளது.