சேலம்: பேருந்தை ஓட்டும்போதே மயங்கிய டிரைவர்… பயணிகளுடன் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து

ஈரோடு மாவட்டம், பெரிய சேமூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ராஜா. இவர் ஈரோடு காசிபாளையம் அரசு போக்குவரத்து டிப்போவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 5.40 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காலை 6.30 மணி அளவில் சங்ககிரி டூ சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வி.என். பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் வந்த போது, டிரைவர் செந்தில் ராஜா உடல்நிலை குறைவால் திடீரென மயக்கமடைந்துள்ளார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். மயக்கம் அடைந்த செந்தில் ராஜாவை நடத்துநர் பாலகிருஷ்ணன் தட்டிப் பார்த்தும் அவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் அருகில் இருந்த சங்ககிரி டிப்போவிற்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து செந்தில் ராஜாவை மீட்டு அருகில் இருந்த சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சங்ககிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தி பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டிரைவர் செந்தில் ராஜா நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தது தெரியவந்தது. விபத்தின் போது எதிர் திசையில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.