மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஃபிரான்க்ஸ் க்ராஸ்ஓவர் மாடலில் Delta+ (O) என்ற வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு Delta+ வேரியண்டை விட ரூ.15,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற Delta+ என்ற மாடலில் உள்ள 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் ஸ்டீயரிங் வீலில் கண்ட்ரோல் சுவிட்சுகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் ORVM, கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
90 PS, மற்றும் 113 Nm வரை வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. கூடுதலாக 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 PS பவர் 148 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஆனால் Delta+ (O) வேரியண்டில் 1.2 லிட்டர் என்ஜின் பெறுகின்றது.
Delta+ (O) வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் உடன் டயர் ரிப்பேர் கிட் பெற்றுள்ளது. Sigma, Delta, Delta+, Delta+ (O), Zeta மற்றும் Alpha ஆகிய வேரியண்டுகளும் ஃபிரான்க்சில் உள்ளது.
Delta+ (O) MT – ₹ 8.93 லட்சம்
Delta+ (O) AMT – ₹ 9.43 லட்சம்
(எக்ஸ்ஷோரூம்)
ரூ.7.51 லட்சத்தில் துவங்குகின்ற ஃபிரான்க்ஸ் மாடலின் ரீபேட்ஜ் பெற்ற டொயோட்டா டைசோர் உட்பட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனோ கிகர், நிசான் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.