இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு துவங்கிய 60 நிமிடங்களில் 50 ஆயிரம் முன்பதிவுகளை XUV 3XO பெற்றுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. முதல் 10 நிமிடங்களில் 27,000க்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ரூ.21,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் மாதந்தோறும் 9,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளதாகவும், தற்பொழுது வரை 10,000 க்கு மேற்பட்ட யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு டெலிவரி மே 26 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
உயர்தரமான பாதுகாப்பு வசதிகளுடன் பல்வேறு 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளுகின்ற 3எக்ஸ்ஓ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் நிலையில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கின்றது.
ரூ.7.49 லட்சத்தில் துவங்குகின்ற xuv 3xo காரின் டாப் வேரியண்டுகளில் Level 2 ADAS மூலம் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், மோதலை தடுக்கும் வசதி, லேன் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (மிதிவண்டி, பாதசாரிகள், மற்றும் வாகனங்கள்), ஹை பீம் அசிஸ்ட் மற்றும் போக்குவரத்து குறியீடுகளை அறிந்து செயல்படும் அம்சம், மற்றும் ஸ்மார்ட் பைலட் வசதியும் உள்ளது.