பாஜக மத்தியில் 2019-ல் ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியது. பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் விரைவாக சட்டமாகவும் மாற்றப்பட்டது. இதன் சாராம்சம் என்பது, `பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும்’ என்பதுதான்.

இதில், முஸ்லிம் மதம், அண்டை நாடான இலங்கை ஆகியவை விடுபட்டது மக்களிடமிருந்தும், பல மாநில கட்சிகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்தை நான்காண்டுகளாக அமல்படுத்தாமலிருந்த பா.ஜ.க அரசு, கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு இந்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது.
அதோடு, குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்களையும் ஆன்லைனில் மத்திய அரசு வெளியிட்டது. மறுபக்கம், முஸ்லிம்களின் குடியுரிமையை பாஜக பறிக்கப்போகிறது, இந்த சட்டம் முஸ்லிம்களை இரண்டாம்தர குடிமக்களாக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
The first set of citizenship certificates after notification of Citizenship (Amendment) Rules, 2024 were issued today. Union Home Secretary Ajay Kumar Bhalla handed over citizenship certificates to some applicants in New Delhi today. Home Secretary congratulated the applicants… pic.twitter.com/RBTYSreN9O
— ANI (@ANI) May 15, 2024
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டமாக 14 விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வழங்கியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb