குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டின் கதவைத் திறக்க முடியாததால், வாயிலிலேயே கரடி படுத்துஉறங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரைத் தேடி, மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் கரடி உள்ளிட்ட விலங்குகள் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தீயணைப்பு அலுவலகப் பகுதியில் ஒரு கரடிசுற்றி வருகிறது. அப்பகுதியில்உள்ள குடியிருப்பில் நுழைந்த கரடி, ஒரு வீட்டின் பின்புற கேட்டைதிறக்க நீண்டநேரம் முயற்சி செய்துள்ளது. எனினும், கதவைத் திறக்க முடியாததால், வீட்டின்முன்புறம் படுத்து உறங்கியது. பின்பு வாகன சப்தத்தைகேட்டு, அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பொதுமக்கள் அச்சம்: குன்னூர் பகுதிகளில் கரடி உலவும் சம்பவங்கள் பொது மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டுள்ளகரடியை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.