மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் என் வரிசை பைக்குகளில் உள்ள N150, N160 மற்றும் N250 ஆகிய மூன்று மாடல்களின் என்ஜின் விபரம், வித்தியாசங்கள் மற்றும் விலை உட்பட அனைத்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
முன்பாக பல்சர் என்எஸ் வரிசை பைக்குகளை பற்றி அறிந்து கொண்ட நிலையில் பல்சர் N vs பல்சர் NS என இரண்டுமே ஸ்டீரிட் பைக் என்றாலும் இரு பிரிவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் பவர் மற்றும் டிசைனில் அடிப்படையாக மாற்றங்களை பெற்றுள்ளது. குறிப்பாக N பைக்குகள் NS மாடலை விட குறைந்த பவரை வெளிப்படுத்துவதுடன் சற்று கூடுதலான மைலேஜ் வழங்குகின்றது.
குறிப்பாக மூன்று பைக்குகளுமே ஒரே மாதிரியான டிசைனை பெற்று மிக ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இருவிதமான பயன்பாடுகளை கொண்ட எல்இடி புராஜெக்டர் விளக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று பைக்குகளுக்கு இடையிலான என்ஜின் ஒப்பீட்டை அறியலாம்.
Pulsar N250 | Pulsar N160 | Pulsar N150 | |
என்ஜின் | 249.07cc single cyl oil cooled | 164.82cc single cyl, Oil cooled | 149.68cc single cyl, air oil cooled |
பவர் | 24.5 PS | 16 PS | 14.5 PS |
டார்க் | 21.5Nm | 14.65Nm | 13.5 Nm |
கியர்பாக்ஸ் | 5 speed | 5 speed | 5 Speed |
மைலேஜ் | 40 kmpl | 44 kmpl | 47 kmpl |
மூன்று பைக்குகளுமே சமீபத்தில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது. அடுத்து நாம் மெக்கானிக்கல் சார்ந்த சஸ்பென்ஷன், பிரேக்கிங் ஒப்பீட்டை அறிந்து கொள்ளலாம்.
Pulsar N250 | Pulsar N160 dual channel ABS | Pulsar N160 single ABS | Pulsar N150 | |
முன்பக்க சஸ்பென்ஷன் | 37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் | 37 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் | 31 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் | 31 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்புறம் சஸ்பென்ஷன் | மோனோஷாக் | மோனோஷாக் | மோனோஷாக் | மோனோஷாக் |
டயர் முன்புறம் | 100/80-17 | 100/80-17 | 100/80-17 | 90/90-17 |
டயர் பின்புறம் | 130/70-17 | 130/70-17 | 130/70-17 | 120/80-17 |
பிரேக் முன்புறம் | 300mm டிஸ்க் | 300mm டிஸ்க் | 280mm டிஸ்க் | 260mm டிஸ்க் |
பிரேக் பின்புறம் | 230mm டிஸ்க் | 230mm டிஸ்க் | 230mm டிஸ்க் | 130mm டிரம் |
வீல்பேஸ் | 1352mm | 1358mm | 1358mm | 1352mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165mm | 165mm | 165mm | 165mm |
எடை | 164 KG | 154 KG | 152kg | 145kg |
எரிபொருள் டேங்க் கொள்ளளவு | 14 லிட்டர் | 14 லிட்டர் | 14லிட்டர் | 14லிட்டர் |
இருக்கை உயரம் | 800mm | 795mm | 795mm | 790mm |
பல்சர் என்160 மாடல் இரு விதமான மெக்கானிக்கல் அம்சங்களை பெற்று சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்றது. பல்சர் என்150 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் பின்புறத்தில் டிஸ்க் அல்லது டிரம் என இரு வித ஆப்ஷனில் கிடைக்கின்றது.
மற்ற இரண்டு மாடல்களை பல்சர் N250 பைக்கில் கூடுதல் வசதிகளாக டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் ரைடிங் மோடுகள் (Road, Rain and Offroad ) இடம்பெற்றுள்ளன.
Bajaj Pulsar N250 Vs N160 Vs N150 ஆன்ரோடு விலை ஒப்பீடு
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
Pulsar N250 | ₹ 1.50 லட்சம் | ₹ 1.82 லட்சம் |
Pulsar N160 | ₹ 1.34 லட்சம் | ₹ 1.60 லட்சம் |
Pulsar N160 SABS | ₹ 1.23 லட்சம் | ₹ 1.48 லட்சம் |
Pulsar N150 | ₹ 1.18 – 1.24 லட்சம் | ₹ 1.42-1.49 லட்சம் |
மிக இலகுவாக மூன்று பல்சர் N பைக்குகளை ஒப்பீடு செய்து விலை உட்பட அனைத்து விதமான விபரங்களையும் சில வசதிகளில் மாறுபட்ட மைலேஜ் சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பல்சர் என்150 மாடலை தேர்வு செய்யலாம்.