லக்னோ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இம்முறை பாஜக 200க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறி உள்ளார். நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், ”நான் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளேன். 4 முக்கிய விஷயங்களை பற்றி பேச விரும்புகிறேன். […]