தனது பட்டிமன்ற பேச்சினால் பலரையும் கவனிக்க வைத்தவர் `சவுண்டு’ சந்தியா. இவர் ஒரு தொகுப்பாளரும் கூட! ஆதித்யா டிவியில் `காலேஜ் டாட் காம்’ போன்ற பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிற கலசப்பாக்கம் தான் இவருடைய சொந்த ஊர். `கண்மணி’ சீரியலில் தனக்குக் கிடைத்த முதல் சீரியல் வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். `சத்யா’, `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, `நம்ம வீட்டுப் பொண்ணு’ போன்ற தொடர்களில் நடித்தவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சக்திவேல்’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பி.காம், பி.எல், எம்.எல் பட்டதாரியும் கூட!
சந்தியாவிற்கும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை நேற்று சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இவர்களுடைய திருமணம் பக்கா அரேஞ்சிடு மேரேஜ் தானாம்! முரளி கிருஷ்ணன் `மெட்டி ஒலி’ சாந்தியின் மகன் தானாம்!

`மெட்டி ஒலி’ சாந்தியின் மருமகளாகத்தான் `சக்திவேல்’ தொடரில் சந்தியா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நிஜ மருமகளாகவே ஆகப் போகிறார். சந்தியா – முரளி இருவருக்கும் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் சந்தியா – முரளி!