சமீபத்தில் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டுகளை பெற்ற டாடா நெக்ஸான் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூடுதலாக மஹிந்திரா XUV 3XO மாடலுக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய பனரோமிக் சன்ரூஃப் ஆனது கொடுக்கப்பட உள்ளது. இந்த சன்ரூஃப் வசதி டாப் வேரியண்டுகளில் பெறலாம்.
4 மீட்டருக்கும் குறைந்த நீளம் உள்ள சந்தையில் மிக கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது எக்ஸ்யூவி 3XO, 1 மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன் ADAS உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மாடலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் முதன்மையாக உள்ள நெக்சானில் ஆனது பல்வேறு மாற்றங்களை பெற உள்ளது. மேலும் கூடுதலாக லெவல் 2 ADAS நெக்ஸான் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
கூடுதலாக அடுத்த சில மாதங்களுக்குள் சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி மாடலில் 120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டிசிடி ஆகியவற்றில் கிடைக்கின்றது. 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT பெற்றுள்ளது.