சிலாவத்துறையில் கடற்படையினரால் சட்டவிரோதமான முறையில் பிடிபட்ட கடலட்டைகளுடன் 02 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் 2024 மே 14 ஆம் திகதி மாலை சிலாவத்துறை, பண்டரவெளி கடற்கரைப்பகுதியில் ஒரு தேடல் நடவடிக்கை மூலம், போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோதமாக பிடிபட்ட கடலட்டைகள் சுமார் மூவாயிரத்து ஐநூறு அளவுடன் (3500) இரண்டு (02) நபர்கள், மற்றும் கெப்வண்டி ஒன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 மே 14 அன்று, சிலாவத்துறை, பாண்டரவல்லி கடற்கரைப் பகுதியில், வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தேரபுத்தாவிற்குச் சொந்தமான பாண்டரவெளி கரையோர கண்காணிப்பு நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைளைக் கொண்டு செல்வதற்காக ஏற்றிக் கொண்டிருந்த இரண்டு (02) நபர்களுடன் கடலட்டைகள் (3500), மற்றும் கெப் வண்டி (01)ம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 31 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) சந்தேகநபர்கள், கடலட்டைகள், மற்றும் கெப் வண்டி (01) ம், மீன்வளத்துறை ஆய்வாளரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.