மிக நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் தற்பொழுது டிவிஎஸ் ஐக்யூப் ST மாடல் இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ரேஞ்ச், பேட்டரி, ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விதமான முழுமையான விபரங்களையும் தற்போது அறிந்து கொள்ளலாம்.
முதல்முறையாக ஐக்யூப் விற்பனைக்கு வெளியிடும் பொழுது இந்த மாடலானது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுது விலை கூடுதலாகவும் பல்வேறு காரணங்களாலும் இந்நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்யவில்லை. தற்பொழுது தான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்ற நிலையில் 5.1 கிலோவாட்ஹவர் மிக அதிகப்படியான பேட்டரியை கொண்டிருக்கின்றது .மேலும் அதிகப்படியாக ரேஞ்ச் 150 கிலோமீட்டர் உண்மையான பயணிக்கும் ரேன்ஜ் வழங்கும் என டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மாடலில் 3.4kwh மற்றும் 5.1kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனில் மிக முக்கியமான பேட்டரி வித்தியாசம் தவிர டாப் ஐக்யூப் 5.1 ST வேரியண்டில் அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ, ரேஞ்ச் 150 கிமீ, டயர் பிரெஷர் மானிட்டர், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 0-80% பெற 4 மணி நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்
3.4kwh ST மாடலில் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ, ரேஞ்ச் 100 கிமீ, சாதாரன TFT திரை, டயர் பிரெஷர் மானிட்டர் பெற ஆப்ஷனலாக கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். சார்ஜிங் நேரம் 0-80% பெற 3 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
அனைத்து ஐக்யூப் மாடல்களும் ஒரே மாதிரியாக BLDC மோட்டாருடன் தொடர்ச்சியாக 3.3kw பவர் (அதிகபட்சமாக 4.4kw) வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 33Nm (அதிகபட்சமாக 140Nm) வழங்குகின்றது.
0-40kmph வேகத்தை எட்ட 4.2 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில் டாப் 5.1Kwh வேரியண்ட் 4.5 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. ஈக்கோ மற்றும் பவர் என விதமான ரைடிங் மோடுகளை பெற்று கூடுதலாக பார்க்கிங் வசதிக்கான ரிவர்ஸ் மோடும் உள்ளது.
மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் அனைத்து மாடல்களும் ஒரே மாதிரியாக அமைந்தாலும் நிறங்களில் மட்டும் வித்தியாசப்படுகின்றது. டாப் ST வேரியண்டில் பிரான்ஸ் மேட், கோரல் சேன்டி, கிரே மேட், மற்றும் ப்ளூ ஆகும்.
டியூப்லெர் ஃபிரேம் கொண்டுள்ள டிவிஎஸ் ஐக்யூப் மாடலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் பெற்று முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்குடன் இருபக்கத்திலும் 90/90-12 டியூப்லெஸ் டயரை பெற்றுள்ளது.
1805mm நீளம், 645mm நீளம் மற்றும் 1140mm அகலம் பெற்றுள்ள ஸ்கூட்டரின் வீல்பேஸ் 157 மிமீ, இருக்கை உயரம் 770 மிமீ மற்றும் வீல்பேஸ் 1301 மிமீ கொண்டுள்ள மாடலில் இருக்கை அடிப்பகுதியில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்டு ஸ்டோரேஜ் இடவசதி கொண்டுள்ளது.
TVS iqube Escooter Onroad Price list
- iqube (2.2Kwh) – ₹ 1,19,042
- iqube (3.4Kwh) – ₹ 1,48363
- iqube S (3.4Kwh) – ₹ 1,59155
- iqube ST (3.4Kwh) – ₹ 1,68,290
- iqube ST (5.1Kwh) – ₹ 1,98,108
(onroad Price Tamil Nadu)