திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விவேகானந்தா கல்லூரியின் தாளாளர் கருணாநிதிக்கு சொந்தமான வீடு, தோட்டங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் லோக்சபா தொகுதியின் வாக்குகள் இந்த கல்லூரியில்தான் எண்ணப்பட இருக்கின்றன. திருச்செங்கோடு அருகே இளையம்பாளையத்தில் விவேகானந்தா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
Source Link
