பெண் முயற்சியாளர்களுக்கான முயற்சியாளர் வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 106 முயற்சியாளர்களில் நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட
67 முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
முயற்சியாளர்களுக்கான இப்பயிற்சியினை JSAC நிறுவனமானது Asia Foundation நிதி அனுசரணையினூடாக வழங்கிவருகின்றது.
இவ்வாறு பயிற்சியினை பெற்றுக்கொண்ட பயனாளிகளில் ஒருபகுதியினர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களின் வியாபார விருத்தியினை நோக்காக கொண்டு மானியம் வழங்கப்பட்டது.
அந்த வகையில் 30முயற்சியாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இவர்களின் வியாபார முன்னேற்றங்கள் தொடர்பில் முயற்சியாளர்களோடு இணைந்து பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.