வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் நோயாளர்களின் உரிமை தொடர்பான பிரகடனம் ஒன்றை வெளியிடுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் துறை சார் மேற்பார்வை தொடர்பான செயற்குழுவில் வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் நோயாளர்களின் பாதுகாப்பிற்கான உரிமை தொடர்பானபிரகடனம் ஒன்றை எதிர்காலத்தில் வெளியிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டத்தின் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கண்டறிவதற்கான விசேட கண்காணிப்பு பயணத்தில் கலந்து கொண்ட போது வைத்தியசாலை அதிகாரிகளுடன் (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேபோது வைத்தியசாலையின் விடுதி, கிளினக், சமையலறை, இரசாயன ஆய்வுக்கூடம் உள்ளடங்கலாக சகல பிரிவுகளுக்கும் சுகாதார அமைச்சர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், வை த்தியசாலையின் சிறு திருத்த வேலைகளுக்காக 25 மில்லியன் ரூபா நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன், வைத்தியசாலைக்கு அவசியமான மருந்துக் களஞ்சியம் ஒன்றை அமைத்தல், ஆரம்ப சுகாதார வைத்திய சத்திர சிகிச்சைப் பிரிவை முன்னேற்றுதல், சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தை நிர்மாணித்தல், மற்றும் அத்தியாவசிய வைத்திய உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவசியமான மதிப்பீட்டை விரைவாக சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை அடுத்த வருடத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிபுரி விடுத்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய சுகாதார அமைச்சர்அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக தற்போது உலகில் புதுயுகம் காணப்படுவதாகவும் அதிகமான நாடுகளின் தகவலுக்கு ஏற்ப வைத்தியசாலைகளில் தங்கி இருக்கும் 7 நோயாளிகளில் ஒருவர் குறைந்தது வைத்தியசாலையில் ஏதேனும் சிக்கலுக்கு முகம் கொடுப்பதாகவும் அது பூகோள நிலைமை என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக உலகின் கோட்பாடு இதைவிட நோயாளிகளுடன் சுகாதாரப் பணியாளர்களின் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும், என் பாதுகாப்பு என்றவிடயம் சுகாதார சேவையில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என வலியுறுத்திய அமைச்சர் , பாராளுமன்றத்தில் மேற்பார்வை செயற்குழுவின் முன்னிலையில் நோயாளர்களின் உரிமை தொடர்பான பிரகடனம் ஒன்றை வெளியிடுவதாகவும் அது எதிர்காலத்தில் சட்டமாக்கப்படக் கூடிய தாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்கால சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஆரம்ப சுகாதார சேவையின் பாதுகாப்பு வேலை திட்டம் போன்ற ஆரம்ப சுகாதார சேவையைப் பலப்படுத்தும் மூன்றாம் நிலை மத்திய நிலையங்களில் காணப்படும் அழுத்தங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் நோய்த்தடுப்பு சிகிச்சை துறையில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய சேவை பங்களிப்பு வழங்குவதாகவும், அதற்கு உதாரணமாக வதுபிடிவள வைத்தியசாலையைக் குறிப்பிடலாம் என்றும், காணப்படும் வளத்தை உச்ச அளவில் பயன்படுத்தி சிறந்த சுகாதார சேவையை வழங்கும் வைத்தியசாலையாக இதனைக் காணக் கூடியதாக உள்ளமை குறித்து அமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர , சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாளித மகீபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன உட்பட பலர் பங்கேற்றனர்.