ரூ.1 லட்சத்துக்குள் அதிக பவர், மைலேஜ் வழங்கும் சிறந்த 5 பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக் மாடல்களில் ரூ.1 லட்சம் விலைக்குள் அதிக பவரை வெளிப்படுத்துகின்ற மாடலாக உள்ள பல்சர் 125 உட்பட  எக்ஸ்ட்ரீம் 125R, ரைடர் 125, மற்றும் SP125 ஆகிய பைக்குகளின் என்ஜின், மைலேஜ் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் நாம் வெளியிட்டிருந்த ரூ.2 லட்சம் விலைக்குள் சிறந்த பைக் தொகுப்பினை தொடர்ந்து ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைக்கு குறைவாக அதிக பவர் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தொகுத்துள்ள பட்டியிலில் 125சிசி சந்தையில் உள்ள மாடல்கள் முன்னிலை வகிக்கின்றன.

குறிப்பாக இந்த பிரிவில் உள்ள மாடல்களில் 10hp முதல் 12hp வரை வெளிப்படுத்துகின்றன. ஆனால் 125சிசி சந்தையில் உள்ள கேடிஎம் 125 டியூக் 14.3hp வெளிபடுத்தினாலும் விலை ரூ.2.20 லட்சத்தை (ஆன்ரோடு) எட்டுகின்றது.

2024 பஜாஜ் பல்சர் NS125 பைக்

பஜாஜ் பல்சர் NS125

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் 125 மற்றும் பல்சர் NS125 என இரு மாடல்களும் அதிகபட்ச பவரை வெளிப்படுத்தினாலும் என்எஸ் 125 விலை தமிழ்நாட்டில் ரூ.1.08 லட்சமாக அமைந்துள்ளது. கூடுதலாக விலை அமைந்திருந்தாலும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 40,000க்கு மேற்பட்ட விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வரும் நிலையில் பல்சர் NS125 பைக்கில் 4 வால்வுகளை பெற்ற 12PS பவர் மற்றும் 11 Nm டார்க் வெளிப்படுத்தும் 124.45cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பல்சர் 125 மாடல் 11.8Ps பவர், 10.8 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக் மாடலில் ஸ்பிளிட் இருக்கை மற்றும் சிங்கிள் இருக்கை என மாறுபட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது. கூடுதலாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்ற மாடல் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை வழங்குகின்றது. டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் வசதியுடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

லிட்டருக்கு 48-52 கிமீ மைலேஜ் வழங்குகின்ற 2024 பஜாஜ் பல்சர் 125 மற்றும் NS125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.02 லட்சம் முதல் ரூ.1.29 லட்சம் ஆகும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R

சமீபத்தில் வெளியான ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 125R அமோக வரவேற்பினை பெற்று டெலிவரி துவங்கி இரு மாதங்களில் 10,000க்கு மேற்பட்ட டெலிவரி செய்யப்படும் நிலையில் உற்பத்தி இலக்கை மாதம் 30,000 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

125சிசி சந்தையில் முதல்முறையாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் 124.7 cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 11.8 PS மற்றும் டார்க் 10.5 Nm வெளிப்படுத்துவதுடன் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த பைக்கில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் என இரு ஆப்ஷனை பெற்று மிகவும் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

லிட்டருக்கு 52-58 கிமீ மைலேஜ் வழங்குகின்ற 2024 ஹீரோ எக்ஸ்டீரீம் 125ஆர் பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.28 லட்சம் ஆகும்.

xtreme 125r

டிவிஎஸ் ரைடர் 125

டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மாதந்தோறும் 40,000 எட்டும் நிலையில் தொடர்ந்து அமோக வரவேற்பினை 125சிசி சந்தையில்  பெற்றுள்ளது.

124.8cc என்ஜின் பெற்ற மாடலில் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 52 முதல் 55 கிமீ வரை கிடைக்கின்றது. ஸ்பிளிட் சீட், சிங்கிள் சீட் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. இந்த மாடலில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.19 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் ஆகும்.

tvs raider 125 iron man

ஹோண்டா SP125

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரசத்தி பெற்ற ஹோண்டாவின் SP125 மற்றும் ஷைன் 125 இரு மாடல்களும் 125சிசி சந்தையில் முதன்மையான இடத்தை பெற்று மாதந்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமான டெலிவரி வழங்கப்படுகின்றது.

இந்த மாடலின் பவர் மற்றவற்றை விட சற்று குறைவாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு என்ஜின் பெற்றுள்ளது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 58 கிமீ வரை கிடைக்கின்றது. இந்த மாடலில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

2024 ஹோண்டா ஷைன் 125 மற்றும் SP125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் ஆகும்.

ஹீரோ கிளாமர் 125

மாதந்தோறும் 30,000 கூடுதலான எண்ணிக்கையில் கிளாமர் 125 விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், இதே என்ஜினை பெற்ற சூப்பர் ஸ்பிளெண்டர்  125 மாடலும் 25,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 56-58 கிமீ வரை கிடைக்கின்றது. இந்த மாடலில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

2024 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் கிளாமர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.98,000  முதல் ரூ.1.16 லட்சம் ஆகும்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ஆகும்.

2023 hero glamour bike launched

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.