RCB vs CSK: இன்று பெங்களூருவில் மழை வருமா? சமீபத்திய வானிலை அறிக்கை!

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: கடந்த வியாழன் அன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது இடத்தைப் உறுதிப்படுத்தியது. போட்டி வாஷ்அவுட் ஆனதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. இதன் மூலம் ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் பிளே-ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ், முற்றிலும் வெளியேறியது. 

இதன் காரணமாக தற்போது நான்காவது இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் போட்டி போட்டு வருகின்றன. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளன. கொல்கத்தா அணி முதல் அணியாக பிளே ஆப்க்கு தகுதி பெற்றது. ராஜஸ்தான் அணியுடனான கடைசி ஆட்டத்தில் அவர்கள் தோல்வி அடைந்தால் 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை ராஜஸ்தான் உறுதி செய்யும். ஒருவேளை தோல்வி அடைந்தால் 16 புள்ளிகளுடன் இருப்பார்கள். பின்பு, பஞ்சாப்க்கு எதிராக ஹைதராபாத் வெற்றி பெறுவதன் மூலம் இரண்டாவது இடத்தை பெற முடியும்.

மறுபுறம் சிஎஸ்கே ஆர்சிபிக்கு எதிராக வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கும். ஆனால் ஆர்சிபி 4வது இடத்தை பிடிக்க சென்னை அணியை நல்ல NRR கொண்டு வெற்றி பெற வேண்டும். 200 ரன்களை சேஸ் செய்தால் 18.1 ஓவர்களுக்குள் வெற்றி பெற வேண்டும். அதுவே முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், CSK-ஐ 182 அல்லது அதற்கும் குறைவாகக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் சென்னை அணி ஆர்சிபி-ஐ தோற்கடித்தால், அதே சமயம் பஞ்சாப் அணி ஹைதராபாத் அணியை தோற்கடித்து, கொல்கத்தா அணி ராஜஸ்தானை தோற்கடித்தால் சென்னை அணி 2வது அணியாக பிளேஆப்பில் இடம் பெற வாய்ப்புள்ளது. 

பெங்களூருவில் மழை வருமா?

இன்று நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை வரலாம் என்று கூறப்படுகிறது. மே 18 அன்று பெங்களூருவின் சில பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெங்களூருவில் சீரான மழை பெய்து வருகிறது. சின்னசாமி ஸ்டேடியம் அமைந்துள்ள மத்திய பெங்களூருவில் நேற்று காலை வரை மழை பெய்தது. ஆனால் நேற்று மாலை மழை வரவில்லை. இன்று போட்டி தொடங்கும் நேரமான இரவு 7.30 மணியளவில் வெப்பநிலை 100% மேக மூட்டத்துடன் சுமார் 23°C ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.