இந்தியாவில் கியா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்

இந்திய சந்தையில் கியா நிறுவனம் தனது செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் என மூன்று மாடல்களை ORIX ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து குத்தகைக்கு (Kia Car Lease) விடும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

கியா நிறுவனம் குத்தகை சேவை முதற்கட்டமாக சென்னை, டெல்லி NCR, மும்பை, ஹைதராபாத்,  பெங்களூரு மற்றும் புனே என ஆறு முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. புதிய சேவைய மாதாந்திர கட்டணமாக ரூ. 21,900/- முதல் ரூ. 28,800/-, மாடல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெற 24 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை வழங்கப்படுகின்றது. இதில் ஏதேனும் ஒரு மாத திட்டத்தை தேர்ந்தெடுப்பதுடன் முன் தொகை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

மாதாந்திர குத்தகை திட்டத்தில் காப்பீடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதால் கூடுதல் செலவுகளை குறைக்கின்றது.

லீசு முடிவில், வாடிக்கையாளர்கள் வாகனத்தைத் திரும்பப் பெறுவதற்கும், குத்தகையைப் புதுப்பிப்பதற்கும் அல்லது புதிய மாடலுக்கு மேம்படுத்துவதற்கும் ஏற்ற வசதிகளை இந்நிறுவனம் வழங்குகின்றது.

குறைந்தபட்ச தொகையை கொண்டுள்ள கியா சோனெட் மாடலுக்கு ரூ. 21,900, செல்டோஸ் குறைந்தபட்ச குத்தகை தொகை ரூ. 28,900 மற்றும் கேரன்ஸ் குறைந்தபட்ச குத்தகை கட்டணம்  ரூ. 28,800 ஆகும்.

இந்திய சந்தையில் இது போன்ற சேவையை ஏற்கனவை மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆடம்பர கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ, பென்ஸ் வழங்கி வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.