உச்சக்கட்ட கடுப்பில் தோனி… அடுத்த சீசனிலும் தல வருவார்…! – காரணம் இதுதான்

Mahendra Singh Dhoni Latest News: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதும் நிலையில், இரவு போட்டியில் ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. 

இருப்பினும், இன்றைய போட்டியின் வெற்றி தோல்வியின் மூலம் குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டரில் எந்தெந்த அணிகள் விளையாடப்போகிறது என்பது இன்று உறுதியாகும். கொல்கத்தா குவாலிஃபயர் 1 போட்டியிலும், பெங்களூரு எலிமினேட்டரிலும் விளையாடும் என்றாலும் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளே இன்னும் தங்களின் இடங்களை உறுதிசெய்யவில்லை. 

பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி

முன்னதாக, நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி (Royal Challengers Bengaluru) அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து சிஎஸ்கே அணி பிளே ஆப் வராமல் வெளியேறியது. சிஎஸ்கே அணி விளையாடிய மொத்தம் 15 சீசன்களில் மூன்றாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு வராமல் வெளியேறியிருக்கிறது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

கிளம்பிய சர்ச்சை

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (Chennai Super Kings) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் (Mahendra Singh Dhoni) கடைசி போட்டி என கூறப்பட்ட நிலையில், நேற்று போட்டி முடிந்ததும் சற்றே குழப்பமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, போட்டி முடிந்ததும் ஆர்சிபி வீரர்கள் மைதானத்தில் நீண்ட நேரம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தோனி, ஆர்சிபி வீரர்களுக்கு கைக்குழுக்காமல் அப்படியே பெவிலியன் திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வைரலாகும் ஒரு வீடியோவில் கைக்குழுக்க தோனி வரிசையின் முதல் ஆளாக காத்திருந்த நிலையில், ஆர்சிபி வீரர்கள் யாரும் வராததை கண்டு தோனி அங்கிருந்து டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி நடப்பது வீடியோவில் தெரிகிறது. இருப்பினும் அவர் ஆர்சிபி அணி நிர்வாகிகளுக்கு கைக்குழுக்கிச் சென்றது தெரிகிறது. 

இரு வேறு கருத்துகள்

இதனால், நெட்டிசன்கள் தொடர்ந்து இரு வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தோல்வியடைந்த ஆதங்கத்தில் தோனி டிரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்பிவிட்டதாக ஒரு தரப்பினரும், தோனி நீண்ட காத்திருந்ததால் அவரின் உடல்நலன் கருதி அவர் டிரெஸ்ஸிங் ரூம்மிற்கு திரும்பியிருக்கலாம் என மற்றொரு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு வீடியோவில் சிஎஸ்கேவின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு விராட் கோலி செல்வதை காண முடிகிறது, அதன்மூலம் அவர் அங்குச் சென்று தோனியை பார்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

ரீ-என்ட்ரி கொடுக்கும் தோனி

அடுத்தாண்டு ஐபிஎல் மெகா ஏலம் (IPL Mega Auction 2025) நடைபெற உள்ள நிலையில், தோனி இந்த சீசனோடு வெளியேறிவிடுவார் என கூறப்பட்டு வந்தது. எனவே, தோனியின் கடைசி போட்டி என கூறப்படும் நிலையில், அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதனை அறிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தோனி நேற்றைய கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட்டாகி வெளியேறியது, அவருக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியை காண முடிந்தது. நேற்றைய போட்டியின் தோல்வி நிச்சயம் தோனிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் எனலாம். எனவே அவர் நிச்சயம் அடுத்த சீசனிலும் விளையாடலாம் என சிலர் கருதுகின்றனர்.

ராபின் உத்தப்பா கருத்து 

குறிப்பாக, முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா (Robin Uthappa) நேற்று போட்டி முடிந்த பின்னர் ஜியோ சினிமாவில் பேசிய போது, “2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் (IPL 2025) விளையாடுவதற்கு எம்எஸ் தோனி மீண்டும் வருவார், அவர் இதுபோன்ற மனவேதனையையும், பின்னடைவுகளையும் இலகுவாக எடுத்துக்கொள்பவர் அல்ல” எனக் கூறினார். எனவே, அந்த கடைசி ஓவர் பின்னடவால் தோனி மீண்டும் ஒரு சீசனை நிச்சயம் விளையாடுவார் என்ற கருத்தும் வலுக்கிறது எனலாம். இருப்பினும் எல்லாம் தோனியின் முடிவிலேயே உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.