அசாதாரண காலநிலை காரணமாக 6மாவட்டங்களில் 3518 குடும்பங்கள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் பல பல பிரதேசங்களில் நூறு மில்லி மீற்றரை அண்மித்ததாக மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் ஏழு மாவட்டங்களுக்கு காணப்படுவதாகவும் நீர் நிலைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதனால் அதனை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தீவி முழுவதுமான முறையில் நிலை கொள்வதனால் தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று (19) கெஸ்பேவ பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சியாக 215 மில்லிமீற்றர் மழை பாதிவாகியுள்ளது.
இவ்வசாதாரண காலநிலையுடன் 3,518குடும்பங்களின் 10299 நபர்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆரச்சிக்கட்டுவ, ஆனவிழுந்தாவ, ராஜகதலுவ, மாஎலிய, பத்துலுஒய மற்றும் முதுபந்திய ஆகிய பகுதிகளும் வெள்ள நீர் நிறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.