அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்றார்!

நியூயார்க்: அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் எட் டுவைட் (Ed Dwight), சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் அவர் பயணித்தார். அவருடன் மேலும் 5 பேர் பயணித்தனர்.

அமெரிக்க விமானப்படையின் விமானியாக எட் டுவைட் பணியாற்றிய காலத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, அவரை நாசாவின் ஆரம்பகால விண்வெளி வீரர்களுக்கான தேர்வு பட்டியலில் சேர்த்திருந்தார். ஆனால், அவரை நாசா தேர்வு செய்யவில்லை. இந்தச் சூழலில் நிறவெறி பேதம் காரணமாக தனது பணியை 1966-ல் துறந்தார்.

இந்நிலையில் 90 வயதான அவர், தற்போது விண்வெளிக்கு பயணித்துள்ளார். சுமார் 10 நிமிடங்கள் வரை விண்வெளியில் மிதந்து ஸீரோ கிராவிட்டியை உணர்ந்துள்ளார். இது சிறந்த அனுபவமாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த விண்வெளி பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. எட் டுவைட் பயணத்துக்கான டிக்கெட்டை தன்னார்வ நிறுவனம் ஒன்று ஸ்பான்ஸர் செய்திருந்தது. அந்த பயணத்துக்கான கட்டண விவரங்கள் வெளியாகவில்லை.

விமான பணியில் இருந்து விலகிய பிறகு சிற்பக் கலையில் அவர் ஆர்வம் செலுத்தினார். அதில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். நிறவெறி பேதம் சார்ந்த சிற்பங்களை அவர் வடிவமைத்து வருகிறார். அவரது கைவண்ணத்தில் உருவான பல சிற்பங்கள் இதற்கு முன்பு விண்வெளிக்குச் சென்றுள்ளன. இதன் மூலம் விண்வெளிக்கு பயணித்த மிக வயதான நபராக அவர் அறியப்படுகிறார்.

1978 வரை கருப்பினத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை நாசா தேர்வு செய்யவில்லை. 1983-ல் நாசா சார்பில் விண்வெளிக்குச் சென்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆனார் ப்ளூஃபோர்ட்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.