கரூர்: ரௌடி கொலை வழக்கு; `மூவர்மீது குண்டர் சட்டம்!' – எஸ்.பி நடவடிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்றவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ஊருக்கு கிளம்பினார், மதுரையைச் சேர்ந்த மேல அனுப்பானடி ராமர் பாண்டி (வயது: 37) என்ற ரௌடி. இவர், தமிழக தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபையின் நிறுவனத் தலைவராக இருந்து வந்த நிலையில், கடந்த 2024, மார்ச் 19 – ம் தேதி அரவக்குறிச்சி அருகே பேரப்பாடி பிரிவு சாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவம் சம்பந்தமாக கரூர் மாவட்டம், கரூர் ஊரக உட்கோட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில், இதுவரை இந்த கொலையில் தொடர்புடைய எதிரிகளாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராமர் பாண்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர்கள், மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது: 21), மதுரை, ஆண்டார்கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர்களான ரமேஷ் என்கிற குளுமை ரமேஷ் (வயது: 26), தர்மா (வயது: 25) ஆகிய மூன்று பேர்தான்.

பிரபாகர் (கரூர் எஸ்.பி)

இந்நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல், உத்தரவின் படி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், கோவை மத்திய சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். இதுவரை, மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய 5 நபர்களின் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், “கரூர் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீதும், பொது அமைதியை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்” என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.