மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் அனீஷ் அவதியா (24), அஷ்வினி கோஷ்தா (24). இவர்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை மது விருந்துக்குச் சென்றுவிட்டு கல்யாணி நகர் சந்திப்பில் அதிகாலை 2:30 மணியளவில் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில், விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நண்பர் அகிப் முல்லா (24) எர்வாடா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்ததாக 17 வயது சிறுவனை காவல்துறை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக பேசிய காவல்துறை தரப்பு,“பிரபல ரியல் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அதற்காக பார் மற்றும் பப்புக்கு சென்று நண்பர்களை சந்தித்துவிட்டு, காரில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மைனர். அதனால், அவர் மீது ஐபிசி மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிற பிரிவுகளையும், கொலை குற்றத்தையும் சேர்த்திருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மதுபானம் வழங்கிய பார் மீது சிறார் நீதிச் சட்டத்தின் 75 மற்றும் 77 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த வழக்கு குறித்து பேசிய வழக்கறிஞர் பிரஷான் பாட்டீல்,“சிறுவன் புனேவில் இருக்கும் விடுமுறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிமன்றம், சிறுவனின் வயதை காரணம் காட்டி, காவல்நிலைய விசாரணைக்கு மறுத்திருக்கிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டருக்கு ஏர்வாடா போக்குவரத்து காவல்துறையுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், விபத்து குறித்து ஒரு கட்டுரை எழுதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88