வரும் ஜூலை 14-17 வரை ஆட்டோமொபைல் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் கொரில்லா 450 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுகின்ற கொரில்லா ரெட்ரோ ரோட்ஸ்டெர் ஸ்டைல் மாடலில் செர்பா 450 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் ரைட் பை வயர் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.
முன்புறத்தில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் மற்றும் மிக நேர்த்தியான கிளஸ்ட்டர் ஆனது அனேகமாக 4 அங்குல TFT சிங்கிள் பாட் கிளஸ்டராக ஹிமாலயன் 450 பைக்கில் உள்ளதை போன்று அமைந்திருக்கலாம். அடுத்ததாக முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்கிற்கு மாற்றாக டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மட்டுமே விலை குறைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆனது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புது விதமான அலாய் வீல் கொடுக்கப்பட்டு டீயூப்லெஸ்டயர் இந்த மாடலுக்கு மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய சந்தையில் ஜூலை 14-17 ஆம் தேதிக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கின் விலை ரூ.2.30 லட்சத்தில் துவங்கி டிரையம்ப் ஸ்பீடு 400 உள்ளிட்ட 400சிசி-450சிசி வரை உள்ள ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளலாம்.
image source – insta/pink_piston