நாட்டின் 75 ஆண்டுகால சாபத்தைப் பற்றி தற்பெருமை பேசுபவர்கள் எவ்வளவுதான் பேசினாலும், குடிமக்கள் மிகச்சிறிய பதவியில் இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயரும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயக அரசியல் கட்டமைப்பே இதற்குக் காரணம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதின்நான்காவது கட்டத்தின் முதல் நாள் நிகழ்வை (17 ) நுவரெலியாவில் ஆரம்பித்து வைத்த போது இதனைத் தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்து பேசிய அமைச்சர்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபா என ஜனாதிபதி அறிவித்த மறுநாளே சிலர் எமக்கு எதிராக வழக்குத் தொடுப்போம் எனவும் இதனை நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர் அனால் அவர்கள் வழக்கு தாக்கல் செய்தலும் செய்யாவிட்டாலும் நாங்கள் 1700 ரூபாவுக்கு குறைவான சம்பளத்திற்கு திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளமாட்டோம் என அமைச்சர் தெரிவித்தார் .
மே தினத்தன்று நாம் பெருத்தோட்டத் தொழிலாளர்கள் 1700 ரூபா சம்பள உயர்வை மாத்திரம் பேச வரவில்லை அத்துடன், பெருத்தோட்டத்தொழிலாளர் சமூகத்தை தோட்டங்களில் முடக்கிவிடுவதை விடுத்து விவசாய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு கிராமங்கள் அமைப்பதற்கு , வீடு கட்டுவதற்கு , காணி உரிமை வழங்கும் திட்டத்தையும் அன்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். இன்று பிரதமர் தலைமையிலான அமைச்சு உபகுழுவின் ஊடாக அதனைச் செய்வதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா என்பது பெருத்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மட்டுமல்ல. விவசாய தொழில்முனைவோர் நீண்ட காலமாக இருக்கும் இடம், சுற்றுலாத் தொழில் உள்ளது, விவசாய பொருளாதாரம் நாட்டிற்கு உணவு மற்றும் பானத்தை வழங்குகிறது. ரணில் விக்கிரமசிங்க இன்று நுவரெலியாவிற்கு புதிய சீர்திருத்தங்களை வழங்கி இந்த பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ஸ்மார்ட் விவசாய தொழிலுக்கு செல்லவும் வழிவகுத்து வருகிறார்.
சிலர் அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். ஒரு கிலோ கரட் 3000க்கு விலை போன போது நுவரெலியா விவசாயிகள் நல்ல பொருளாதாரத்தை உருவாக்கினர். காய்கறி இல்லாத வீட்டில் நெல் விளைய முடியாது. இவை அனைத்தையும் வழங்கும் நுவரெலியா, தொழில்நுட்பத்தை முன்னேற்றி, விவசாயத் தொழிலில் முன்னேற்றமிக்க பிரதேசமாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். இந்த நுவரெலியாவை சுற்றுலாத் துறையில் மிகவும் வளர்ச்சியடைந்த இடமாகவும், உலகின் கவர்ச்சிகரமான இடமாகவும் மாற்றியமைக்க முடியும் இவை அனைத்திற்கும் மத்தியில், எங்கள் தொழிலாளர்களை சிறந்த திறமைசாலிகளாக மாற்றுவதற்கான ஆற்றலுடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.என்றார்