சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 23-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அதற்கான ஆரஞ்ச் அலர்ட் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் 296 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், பேரிடர் மேலாண்மை துறை மூலமாக 2.66 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மையை 1070 என்ற உதவி எண் மூலமும், மாவட்ட பேரிடர் மேலாண்மையை 1077 என்ற எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
20.05.2024: கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும். விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
21.05.2024: கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும். விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
22.05.2024: கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். விருதுநகர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
23.05.2024: கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.