SAIC குழுமத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற கிளவுட் EV காரின் அடிப்படையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரூபாய் 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிட உள்ளது.
தற்பொழுது இந்த மாடல் ஆனது இந்திய சந்தையில் சாலை சோதனை ஓட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் டிசைன் வரைபடம் காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் கிளவுட் EV என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டாலும் இந்திய சந்தைக்கு இந்த மாடலானது வேறொரு புதிய பெயரை பெற்றிருக்கும் அனேகமாக எம்ஜி மோட்டார் நிறுவனம் EV பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பெயரை பெற்றிருக்கலாம்.
இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் Excelor EV, Wemblor EV, Aulder EV, Trudor EV, Waltor EV, Chester EV ஆகிய பெயர்களை வர்த்தக முத்திரையாக பதிவு செய்துள்ளதால், இவற்றில் ஏதேனும் ஒரு பெயரை இந்த எலக்ட்ரிக் எம்பிவி மாடல் பெறக்கூடும்.
MG Cloud EV
இந்தோனேசியா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கிளவுட் இவி மாடலில் எம்பிவி ஸ்டைலை பெற்றிருந்தாலும் 5 இருக்கைகளை மட்டுமே பெற்று 37.9kWh மற்றும் 50.6kWh என இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடல் 134hp பவரை வெளிப்படுத்தும் நிலையில் குறைந்தபட்ச 37.9kWh பெற்ற வேரியண்ட் 360 கிமீ ரேஞ்ச் மற்றும் டாப் 50.6kWh பேட்டரி பெற்றுள்ள மாடல் 460 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது.
இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ள மாடலில் இடம்பெற உள்ள பேட்டரி விபரம் எதுவம் உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை இந்தியாவில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV காரில் இடம்பெற்றிருக்கின்ற 461 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற 50.3 kwh பேட்டரி பேக் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
குறிப்பாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கார்களில் உயர் ரக டெக் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்குவதில் முன்னோடியாக உள்ளதால் பல்வேறு வசதிகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் லெவல் 2 ADAS சார்ந்த உயர்ரக இரண்டாம் கட்ட பாதுகாப்பு வசதிகளும் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரவுள்ள எம்ஜி எலக்ட்ரிக் எம்பிவி மாடலின் விலை ரூ.15-20 லட்சத்துக்கும் குறைவாக துவங்க வாய்ப்புகள் உள்ளது.