இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கும் கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் புதிய 2024 ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மூலம் இயங்கும் மாடலை அடுத்த சில மாதங்களில் வெளியிட உள்ளது.
சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்களை விற்பனை செய்வதில் நாட்டின் முதன்மையான தயாரிப்பாளராக உள்ள மாருதி சுசூகி நிறுவனம் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் ஆப்ஷனில் சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கும் டியாகோ மற்றும் டிகோர் கார்களை வெளியிட்டுள்ளது.
டியாகோ காருக்கு போட்டியாக உள்ள ஸ்விஃப்ட் மாடலுக்கு சிஎன்ஜி ஆப்ஷனை வெளியிட உள்ள மாருதி சுசூகி மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கும் நிலையில் ஏஎம்டி ஆப்ஷனை வழங்குமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றாலும் போட்டியை எதிர்கொள்ள வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
முந்தைய நான்கு சிலிணடர் 1.2 லிட்டருக்கு என்ஜினுக்கு மாற்றாக புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பெற உள்ள சிஎன்ஜி மாடல் பெட்ரோலை விட சற்று குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம். பெட்ரோலில் இயங்குகின்ற மாடல் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
மேலும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் சிஎன்ஜி பயன்முறையில் இயங்கும் பொழுது ஒரு கிலோ எரிபொருளுக்கு 32 கிமீ வரை மைலேஜ் வெளிப்படுத்தலாம்.
கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனில் வெளிவந்தால் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு நிச்சியமாக 35 கிமீ மைலேஜ் வரை வழங்கலாம்.
ஒன்று அல்லது இரண்டு வேரியண்டுகள் மட்டும் சிஎன்ஜி ஆப்ஷனை பெறக்கூடும் என்பதனால் பெட்ரோல் மாடலை விட ரூ.90,000 முதல் 95,000 கிமீ வரை கூடுதலாக அமைந்திருக்கலாம், தற்பொழுது 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது.