இன்றைய விலையுயர்ந்த கார் சந்தையில் இக்னிஸ் (Maruti Suzuki Ignis) சிறந்த கார். இப்போதைய மார்க்கெட்டில் பலராலும் இக்னிஸ் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு கார் என்பது உண்மை தான். அதேநேரத்தில் இந்த கார் மற்ற பிராண்டு அல்லது மாடல்களை விட பல விஷயங்களில் சிறப்பாகவே இருக்கிறது. மிக முக்கியமாக நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான சிறந்த மதிப்பை உங்களுக்கு வழங்குகிறது. இக்னிஸ் கார் நகரத்தில் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது என்பது பலரின் கருத்து. நெடுஞ்சாலைகளில் நீங்களே வியக்கத்தக்க வகையில் இந்த கார் செல்லும்.
எக்சேஞ்ச் போனஸ் உட்பட Zeta Automaticக்கு சென்னையில் 6.89 லட்சம் விலையில் விற்பனையாகிறது. இந்த விலையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் அடங்கும். மேலும் டீலரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் ஆக்சஸரீஸ் இலவசமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது நீங்கள் கார் வாங்கும் டீலரை பொறுத்ததே. தற்போதைய சூழ்நிலையில் இந்த கார் ஒரு சிறந்த டீல் என்பதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
மாருதி சுசூகி இக்னிஸ் காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கே சீரிஸ் எஞ்சின் இருக்கிறது. மார்க்கெட்டில் சிறந்த இன்ஜின் என பெயர் பெற்றது இது. மற்ற உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது இது மிகச் சிறந்த சராசரி, உயர்ந்த இயந்திரம், NVH உடன் சரியான 4 சிலிண்டர் எஞ்சின் கொண்டிருக்கிறது. எதிர்பார்க்கும் அளவுக்கான மைலேஜ் சிறப்பாக இருக்கிறது. நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இருக்கிறது. நீங்கள் செலுத்தும் விலைக்கு நல்ல அம்சங்கள் இந்த காரில் (Maruti Suzuki Ignis) தாராளமாக இருக்கின்றன. Zeta வேரியண்டில் உண்மையான கீலெஸ் என்ட்ரி (2 ரிமோட் கீகள்), பிளாக் ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், ஸ்பாய்லர், ஃபங்ஷனல் ரூஃப், ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆப்பிள் கார் பிளே, ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள் இருக்கும்.
இவையனைத்தும் எலக்ட்ரிக்கலாக இயக்கப்படும். மடிக்கக்கூடிய கண்ணாடிகள், பனி விளக்குகள், வாஷருடன் rear wiper மற்றும் இன்னும் சில அம்சங்களும் Maruti Suzuki Ignis -ல் இருக்கின்றன. ஆன்ரோடு விலையில் 8 லட்சம் ரூபாய்க்குள் இந்த அனைத்து அம்சங்களையும் யாரும் வழங்குவதில்லை. கூடுதலாக தற்போது நல்ல தள்ளுபடிகளும் மாருதி இக்னிஸூக்கு உள்ளன. ஆல்டோ, வேகன் ஆர், செலிரியோ, டியாகோ போன்ற பட்ஜெட் கார் பேட்ஜை இது கொண்டு செல்லாது. சஸ்பென்ஷன் கொஞ்சம் கடினமானது ஆனால் மோசமாக இல்லை. அமருவதற்கு காருக்கு உள்ளே நல்ல இடம் இருக்கிறது. இந்த இடத்தைப் பார்த்து வாங்குபவர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார். 260 லிட்டரில் பூட் ஸ்பேஸும் நன்றாக இருக்கிறது.
Maruti Suzuki Ignis -ல் AMT நன்றாக இருக்கிறது, குறைவான ஜெர்கி. இது ஸ்டார் செய்தபிறகு மூவிங் மெதுவாக உள்ளது, ஆனால் அது பெரிய பிரச்சனை இல்லை. நெடுஞ்சாலைகளில், AMT வியக்கத்தக்க வகையில் வேகமாக செல்கிறது. மொத்தத்தில் இந்த விலையில் கார் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த கார் என்றே தாராளமாக சொல்லலாம். பெரிய பட்ஜெட் இல்லாதவர்கள் இந்த விலையில் கார் வாங்க வேண்டும் என விரும்புவர்கள் தாராளமாக மாருதி இக்னிஸ் வாங்குவது குறித்து பரிசீலித்தால், இந்த காரணங்களுக்காக வாங்கலாம் என்று சொல்லலாம்.