குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகளை பெற்ற மிகவும் பாதுகாப்பான எஸ்யூவிகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்யூவிகளில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகள் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் மிக சிறப்பான கட்டுமானத்தை கொண்டுள்ள 5 கார்களை முறையே வரிசைப்படுத்தியுள்ளேன்.

பொதுவாக இந்திய சந்தையில் ஹூண்டாய், கியா என இரு நிறுவனமும் அடிப்படையாகவே அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ளது.  மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மிக உறுதியான கட்டுமானத்தை கொண்டுள்ள கார்கள் மூலம் சர்வதேச அளவில் GNCAP கிராஷ் டெஸ்ட் சோதனை 5 நட்சத்திரங்களை பெற்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

மஹிந்திரா XUV 3XO

முந்தைய எக்ஸ்யூவி 300 புதுப்பிக்கப்பட்டு XUV 3XO என்ற பெயரில் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள மாடலின் ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் Level 2 ADAS பாதுகாப்பினை பெற்றுள்ள மாடல் ரூ.14.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

111hp பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல், 131 hp பவரை கொண்டுள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 117hp பவர், 300Nm டார்க் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெறள்ளள்ளது. இதில் பெட்ரோல் வகையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் உடன் டீசல் என்ஜின் பெற்றுள்ள மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள், இருக்கை பெல்ட், ESC உள்ளிட்ட வசதிகளுடன் இந்த பிரிவில் ADAS இரண்டாம் கட்ட வசதியை பெற்றுள்ள மஹிந்திராவின் XUV 3XO ஆன்ரோடு விலை ரூ.9.01 லட்சம் முதல் ரூ.18.75 லட்சம் வரை உள்ளது.

xuv 3xo side view

டாடா நெக்ஸான்

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்று அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கின்ற டாடா நெக்ஸான் விலை ரூ.8 லட்சம் முதல் துவங்கி ரூ.15.80 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை சுமார் 78 விதமான வேரியண்டுகளை பெற்றுள்ளது.

120hp பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 115 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்று 5 வேக மேனுவல், 6 வேக மேனுவல் , 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் ஏஎம்டி என மாறுபட்ட கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

6 ஏர்பேக்குகள், இருக்கை பெல்ட் உட்பட உறுதியான கட்டுமானத்தை கொண்டுள்ள டாடா நெக்ஸான் ஆன்ரோடு விலை ரூ.9.52 லட்சம் முதல் ரூ.19.74 லட்சம் வரை கிடைக்கின்றது.

கியா சொனெட்

லெவல் 1 ADAS நுட்பத்தினை கொண்டுள்ள கியா சொனெட் எஸ்யூவி விலை ரூ. 7.99 லட்சம் முதல் ரூ. 15.75 லட்சம் வரை அமைந்துள்ள மாடலில் 6 ஏர்பேக்குகளை கொண்டுள்ளது. இந்த காரில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது.

82 hp பவர் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் , 118 hp பவருடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் பெற்று 5 ஸ்பீடு மேனுவல், 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

2024 கியா சொனெட் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ. 9.57 லட்சம் முதல் ரூ.19.56 லட்சம் வரை உள்ளது.

ஹூண்டாய் வெனியூ

6 ஏர்பேக்குகளை பெற்றுள்ள அனைத்து ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி மற்றும் வெனியூ என்-லைன் ஆரம்ப விலை ரூ.7.94 லட்சத்தில் துவங்கி லெவல் 1 ADAS பெற்றுள்ள காரின் விலை ரூ. 13.90 லட்சம் வரை உள்ளது.

சோனெட் மற்றும் ஹூண்டாய் வெனியூ என இரு மாடல்களும் ஒரே மாதிரியாக 82 hp பவர் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் , 118 hp பவருடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் பெற்று 5 ஸ்பீடு மேனுவல், 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

2024 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ. 9.49 லட்சம் முதல் ரூ.17.31 லட்சம் வரை உள்ளது.

hyundai venue suv gets adas

ஹூண்டாய் எக்ஸ்டர்

எக்ஸ்டர் சிறிய எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ள நிலையில் இதன் போட்டியாளரான டாடா பஞ்ச் ஆரம்ப நிலை வேரியண்ட் 2 ஏர்பேக்குகளை கொண்டுள்ளது. எக்ஸ்டர் எஸ்யூவி விலை ரூ.6.13 லட்சத்தில் துவங்கி ரூ.10.28 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலில் 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த காரிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

2024 ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ. 7.46 லட்சம் முதல் ரூ.12.98 லட்சம் வரை உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.