2024 பஜாஜ் பல்சர் N250 vs பல்சர் F250 இரு பைக்குகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

250சிசி சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற நேக்டூ ஸ்டைல் பல்சர் N250 மற்றும் செமி ஃபேரிங் ஸ்டைல் பல்சர் F250 என இரு மாடல்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் மற்றும் ஒற்றுமை, சிறப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

என்ஜின் சார்ந்த அம்சங்களில் இரு 250சிசி பைக்குகளும் ஒரே மாதிரியான பவர் மற்றும் டார்க் உள்ளிட்ட அம்சங்களை வழங்குவதுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஏபிஎஸ் மோடுகள் (Road, Rain and Offroad) மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியை பெற்றுள்ளன.

249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற இரு மாடலும் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

Pulsar N250/F250
என்ஜின் 249.07cc single cyl oil cooled
பவர் 24.5 PS
டார்க் 21.5Nm
கியர்பாக்ஸ் 5 speed
மைலேஜ் 40 kmpl

இரு பைக்குகளும் பொதுவாக பல்வேறு அம்சங்களை ஒரே மாதிரியாக பகிர்ந்து கொள்கின்றன குறிப்பாக என்ஜின் உட்பட பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு பிரேக்கிங் அமைப்பு, டயர்,  17 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட அனைத்திலும் பார்த்தீர்கள் என்றால் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பெரிய அளவில் எந்த ஒரு வித்தியாசமும் வழங்கப்படவில்லை.

பஜாஜ் பல்சர் F250

பஜாஜ் பல்சர் N250

இரு மாடல்களிலும் இரு பக்க டயரில் முன்புறத்தில் 300 மிமீ மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. தற்பொழுது பின்புறம் 140/70-17 டயர்  முன்புறத்தில் வழக்கம் போல 110/70-17 டயர் உள்ளது.

முன்புற சஸ்பென்ஷனில் பல்சர் என்250 மாடல் கோலடன் நிறத்தில் (கருப்பு நிறத்தை பெற்ற மாடலில் கருமை நிற) அப்சைடு டவுன் ஃபோர்க்கினை பெறும் நிலையில் F250 மாடல் தொடர்ந்து டெலிஸ்கோபிக் ஃபோரக்கினை மட்டும் பெறுகின்றது.

Pulsar N250 Pulsar F250
முன்பக்க சஸ்பென்ஷன் 37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் 37 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புறம் சஸ்பென்ஷன் மோனோஷாக் மோனோஷாக்
டயர் முன்புறம் 100/80-17 110/80-17
டயர் பின்புறம் 130/70-17 140/70-17
பிரேக் முன்புறம் 300mm டிஸ்க் 300mm டிஸ்க்
பிரேக் பின்புறம் 230mm டிஸ்க் 230mm டிஸ்க்
வீல்பேஸ் 1352mm 1358mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165mm 165mm
எடை 164 KG 166 KG
எரிபொருள் டேங்க் கொள்ளளவு 14 லிட்டர் 14 லிட்டர்
இருக்கை உயரம் 800mm 795mm

 

2024 பஜாஜ் பல்சர் பைக்குகளில் பொதுவாக டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரைட் கனெக்ட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இரு மாடலும் ஸ்மார்ட்போன் தொடர்பான இணைப்புகளை பெற்றுள்ளது.

Bajaj Pulsar N250 Vs F250 ஆன்ரோடு விலை ஒப்பீடு

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Pulsar N250 ₹ 1.51 லட்சம் ₹ 1.82 லட்சம்
Pulsar F250 ₹ 1.51 லட்சம் ₹ 1.82 லட்சம்

இரு பல்சர் N250, F250 என இரண்டு பைக்குகளும் ஒரே விலையில் அமைந்திருந்தாலும் 2024 பஜாஜ் பல்சர் என்250 மாடல் அப்சைடு டவுன் ஃபோர்க், நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை பெற்று மிக நேர்த்தியாக உள்ளது.  ஆனால் பல்சர் F250 பைக்கின் விலை உயர்த்து எண்ணம் இல்லை என்பதனால் விலை குறைப்பிற்க்காக தொடர்ந்து முந்தைய மாடலில் இருந்து சிறிய மாறுதல்களை மட்டும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க – பல்சர் N பைக்குகளுக்கு இடையில் உள்ள வித்தியாசங்கள்

2024 பஜாஜ் பல்சர் N250

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.