Ananda Vikatan Cinema Awards: திறமைகளைக் கொண்டாடும் பிரமாண்ட மேடை; நேரில் காண ஓர் அரிய வாய்ப்பு!

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.

அதே போல், 2023-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வருகிற மே 31-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்பதாக மொத்தம் 34 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் (Nominees List) தற்போது வெளியாகியிருக்கிறது. awards.vikatan.com என்ற இணையதளத்தில் பரிந்துரைப் பட்டியல் முழுவதையும் பார்க்கலாம்.

இந்த விருது விழாவில் தமிழ்த் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இப்படியானதொரு நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா?

Vikatan Awards

awards.vikatan.com என்ற இணையதளத்திற்கு விசிட் அடித்துப் பரிந்துரைப் பட்டியலிலிருப்பவர்களில் வெற்றியாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்லுங்கள். உங்கள் தேர்வும், விகடன் தேர்வுக்குழுவின் தேர்வும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்கான இலவச டிக்கெட் உங்களுக்கு வழங்கப்படும்.

விருதுகள் வாசகர்களின் வாக்குகள் சார்ந்து வழங்கப்படாது. நடுவர்கள் ஏற்கெனவே வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் வெற்றியாளரைச் சரியாகக் கணிக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்கான இலவச டிக்கெட் கிடைக்கும். இது குறித்த கூடுதல் விவரங்களைக் கீழே இருக்கும் இணைப்பில் காணலாம்.

இங்கு கிளிக் செய்து சரியான வின்னர்களை கண்டுபிடித்து இந்த நிகழ்வை விகடனோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.