மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் அனீஷ் அவதியா (24), அஷ்வினி கோஷ்தா (24) ஆகிய இருவரும் புனேவில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற 17 வயது சிறுவன், நண்பர்களுக்கு பாரில் மது விருந்து கொடுத்துவிட்டு சொகுசு காரான Porsche காரில் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். சுமார் 200 கி.மீ வேகத்தில் மது போதையில் வந்துகொண்டிருந்த சிறுவனின் கார் கட்டுப்பாட்டை இழந்து, பைக்கில் சென்றுகொண்டிருந்த ஐடி ஊழியர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஐடி ஊழியர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை பிடித்து, அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுவன் மீது கொலை உள்ளிட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, புனே சிறப்பு நீதிமன்றத்தில் சிறுவனை ஆஜர்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு, ஏர்வாடா போக்குவரத்து காவல்துறையுடன் 15 நாட்கள் பணியாற்றவும், விபத்து குறித்து 300 வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதி நீதிமன்றத்தில் சமர்பிக்கவும், மது பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட மனநல ஆலோசனை வழங்கவும் உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கியது.
அதே நேரம், விபத்து நடந்த பகுதியின் சிசிடிவி வீடியோவும், சிறுவன் பாரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறை, இந்த வழக்கு தொடர்பாக சிறுவனின் தந்தையான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வாலை கைது செய்திருக்கிறது. மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய பாருக்கு எதிராக 75, 77 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “இந்த கொலை வழக்கு சிறுவனின் தந்தையான விஷால் அகர்வால் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் சிறுவனை காவலில் எடுத்து விசாரிக்க கோரியிருந்தோம். ஆனால், சிறார் குற்றப்பிரிவில் இந்த வழக்கு வருவதால் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது மீண்டும் அதே கோரிக்கையை, மேலும் கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில் கோரவிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88