அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 56 ஆவது ஒசுசல கிளை வெள்ளவத்தையில் திறப்பு

அரசாங்க மருந்தாக்கல் கூட்டத்தாபனத்தின் (SPC)  வெள்ளவத்தை அரச மருந்தகமான ஒசுசலவின் மற்றுமொரு கிளை நேற்று (21) பிற்பகல் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரணவின் தலைமையில் திறக்கப்பட்டது.

அதற்கிணங்க அரச மருந்தாக்கல் கூட்டத்தாபனத்தில் ஒசுசல வலையமைப்பின் 56ஆவது ஒசுசல மருந்தகம் வெள்ளவத்தை நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வொசுசல ஊடாக அனுபவமிக்க மருந்தாளர்களின் சேவையை அரச அங்கீகாரத்துடன் உயர் தரத்திலான மருந்துகளை குறைந்த விலையில் நுகர்வோர் கொள்வனவு செய்யலாம் என்பதுடன் சிரேஷ்ட பிரஜைகள், கர்ப்பிணத் தாய்மார்கள் மற்றும் 05 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளுக்காக 5% வீத விலைக் கழிவுடன் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது விசேட அம்சமாகும்.

1971 வருடத்தில் பேராசிரியர் சேனக பிபிலேயினால் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன்,  கடந்த 53 வருட காலப்பகுதியில் நாடு முழுவதும் மருந்தக (ஒசுசல ) வலையமைப்புக்களை அமைத்துள்ளன.

ஒசுசல திறந்து வைக்கப்பட்டதுடன் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண முதலாவதாக மருந்துக் கொள்வனவில் ஈடுபட்டார்.

இதன்போது சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால, கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் அஜித் மென்டிஸ், உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.