சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற நான்காம் தலைமுறை 2024 கியா கார்னிவல் எம்பிவி காரின் சாலை சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதனால் பண்டிகை காலத்துக்கு முன்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம்.
கார்னிவல் எம்பிவி ரக மாடலில் 3.5 லிட்டர் பெட்ரோல் V6 என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் பெற்றிருந்தாலும், இந்திய சந்தைக்கு 200bhp மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருக்கும்.
கியாவின் புதுப்பிக்கப்பட்ட கிரில் பெற்றுள்ள கார்னிவலில் L-வடிவ பகல்நேர ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லைட் பெற்று முன்புறத்தில் அகலமான ஏர்டேம் உடன் அலுமினிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளது.
7, 9 மற்றும் 11 இருக்கை கொண்டதாக உள்ள இந்த காரில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என இரட்டை பிரிவு கொண்டுள்ள இன்டிரியரில் பின்புற பயணிகளுக்கு தனியான பொழுதுபோக்கு சார்ந்த 14.6 இன்ச் HD டிஸ்பிளே உள்ளது.
சர்வதேச அளவில் 8 ஏர்பேக்குகளை பெற்று ADAS உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ள இந்த மாடல் இந்திய சந்தைக்கு CKD முறையில் விற்பனைக்கு வரும் என்பதனால் 2024 கியா கார்னிவல் விலை ரூ.30 லட்சத்தில் துவங்கலாம்.
image instagram/ autojournal_india