டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு… புதிய பார்ட்னர் யார் தெரியுமா?

Tata Motors: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் (TMPV) மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி (TPEM) ஆகியவை டீலர்களுக்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில்,  இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த்துள்ளன.

டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்கள்

TMPV மற்றும் TPEM ஆகியவை இந்திய ஆட்டோமோட்டிவ் சந்தையில் அதன் ICE மற்றும் EV பிரிவுகளில் முன்னோடியாக இருந்து வருகின்றன. நிறுவனத்தின் பரந்த புதிய ஃபாரெவர் தத்துவம் நுகர்வோரால் பெருமளவில் பாராட்டப்படும் பிரிவில் முன்னணி தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வழிவகுத்தது.

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ் இந்தியாவில் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட NBFC களில் ஒன்றாகும், கடன், வைப்புத்தொகை மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவற்றில் 83.64 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. 20214ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தின் சொத்துக்கள் 3 லட்சத்து 30 ஆயிரத்து 615 கோடி ரூபாயாக இருந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைக் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனமானது, அதன் பயணிகள் மற்றும் மின்சார வாகன விற்பனையாளர்களுக்கான விநியோக சங்கிலி நிதி தீர்வுகளை விரிவுபடுத்துகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம், பங்குபெறும் நிறுவனங்கள் TMPV மற்றும் TPEM நிதிப்பயனீடுகளைக் குறைந்தபட்ச உத்திரவாதங்களுடன் வழங்குவதற்காக பஜாஜ் ஃபைனான்ஸின் பரந்த அணுகலைப் பயன்படுத்த ஒன்றிணைந்து செயல்படும். 

இந்த கூட்டாண்மைக்கான (MoU) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைமை நிதி அதிகாரி திமான் குப்தா மற்றும் டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிகிள்ஸ் லிமிடெட் இயக்குனர் சித்தார்த்தா பட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைமை வணிக அதிகாரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தீர்வுகளை அடைய…
 
இந்த கூட்டாண்மை குறித்து, டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைமை நிதி அதிகாரியும், டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிகிள்ஸ் லிமிடெட் இயக்குநருமான திமன் குப்தா கூறுகையில், “எங்கள் டீலர் பார்ட்னர்கள் எங்கள் வணிகத்துடன் ஒருங்கிணைந்தவர்கள், எளிதாக வணிகம் செய்ய அவர்களுக்கு உதவும் வகையிலான தீர்வுகளை அடையச் செய்ய தீவிரமாக செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஒன்றிணைந்து, சந்தையை மேம்படுத்துவதையும், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் புதிய ஃபாரெவர் போர்ட்ஃபோலியோவை வழங்குவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில், இந்த நிதித் திட்டத்திற்காக பஜாஜ் ஃபைனான்ஸுடன் பார்ட்னராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் டீலர் பார்ட்னர்களின் அதிகரித்த செயல்பாட்டு மூலதனத்திற்கான அணுகலை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.

தொழில்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்
 
இந்த பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் துணை நிர்வாக இயக்குனர் அனுப் சஹா, 
“பஜாஜ் ஃபைனான்ஸில், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளுக்கு நிதியளிப்பதற்கான இந்தியா ஸ்டேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த தரமான செயல்முறைகளை வழங்க நாங்கள் எப்போதும் முயற்சித்து வருகிறோம். 

இந்த நிதித் திட்டத்தின் மூலம், TMPV மற்றும் TPEM இன் அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் மற்றும் மின்சார வாகன விநியோகஸ்தர்களை நிதி மூலதனத்துடன் இணைப்போம். இது, வளர்ந்து வரும் பயணிகள் வாகனச் சந்தையால் வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவும்.  இந்த ஒத்துழைப்பு டீலர்களுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து அதை மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

மேலும் படிக்க | செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.