சென்னை: தமிழகத்தில் கடந்த ஒருவாரத்தில் பெய்த கோடை கனமழைக்கு 12 பேர் மரணம் அடைந்துள்ளதாக தமிர்நாடு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, அக்னி நட்சத்திரம் காலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழையாக கொட்டி வருகிறது. அதன்படி, கடந்த 16ஆம் தேதியில் இருந்து நேற்று வரை கனமழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை […]
